இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை பிளே ஆப் சுற்றிற்கான போட்டியில் முதல் மூன்று அணிகளாக கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் முன்னேறிய வேளையில் கடைசி ஒரு இடத்திற்கான போட்டி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நிலவி வருகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் வேளையில் பெங்களூரு அணியை வீழ்த்தினால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என்கிற நிலையில் இருக்கிறது.
இந்த தொடரில் 42 வயதான சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது கடைசி சீசனில் விளையாடி வருவதால் அனைவரது வரவேற்பும் அவருக்கு அமோகமாக இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு முழங்காலில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக பேட்டிங்கில் பின்வரிசையில் களமிறங்கி கடைசிகட்ட ஓவர்களில் அதிரடியாக பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி வருகிறார். அதோடு தோனி களமிறங்கும் போது வழக்கம் போலவே இந்தியா முழுவதும் “தோனி.. தோனி..” என்று ரசிகர்கள் தங்களது அமோகமான வரவேற்பை வெளிப்படுத்தி தங்களது அன்பை பகிர்ந்து வருகின்றனர்.
அதோடு விசில் சத்தம், டார்ச் லைட் அடிப்பது என கோலாகலமாக தோனியின் வருகையையும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை நேரில் கண்ட ஆஸ்திரேலிய வீராங்கனை அமண்டா வெலிங்டன் தோனி களமிறங்கும் போது ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஆஸிக்கு கவலையே இல்ல.. இந்தியா வேற லெவல் டீமா இருந்தாலும் தோல்விக்கு இதான் காரணம்.. மிஸ்பா
அதில் சென்னையில் தோனி விளையாடுவதை பார்த்தது ஒரு அற்புதமான உணர்வு. தோனி களமிறங்கும் போது ரசிகர்கள் கொடுக்கும் விசில் சத்தத்தை கேட்க விருப்பம் இல்லாத அளவிற்கு ரசிகர்கள் தங்களுடைய சத்தத்தின் மூலம் எனது காதுகளை வலிக்க செய்துவிட்டனர் என அமண்டா வெலிங்டன் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



