89க்கு ஆல் அவுட்.. முன்னாள் சாம்பியனை தெறிக்க விட்ட டெல்லி.. முதல் முறையாக குஜராத் 2 மோசமான சாதனை

GT vs DC
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் 32வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு இஷாந்த் சர்மா வேகத்தில் கேப்டன் சுப்மன் கில் ஆரம்பத்திலேயே 8 ரன்னில் அவுட்டானார் .

அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் திணறலாக விளையாடிய ரிதிமான் சகா 2 (10) ரன்னில் முகேஷ் குமார் வேகத்தில் அவுட்டானார். அதற்கடுத்த சில ஓவரில் தமிழக வீரர் சாய் சுதர்சனும் துரதிஷ்டவசமாக 12 (9) ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதே ஓவரில் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய நட்சத்திர டேவிட் மில்லரும் 2 ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

சுருண்ட குஜராத்:
அதனால் 30/4 என ஆரம்பத்திலேயே திணறிய குஜராத்தை மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடி காப்பாற்ற முயற்சித்த அபினவ் மனோகரை 8 (14) ரன்களில் ட்ரிஷன் ஸ்டப்ஸ் அவுட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த தமிழக வீரர் சாருக்கானையும் அடுத்த பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாக்கி தெறிக்க விட்டார். அதனால் 48/6 என திணறிய குஜராத் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது குஜராத்தின் கடைசி நம்பிக்கை ஜோடியான ராகுல் திவாட்டியா மற்றும் ரஷித் கான் ஆகியோர் நிதானமாக விளையாடி சரிவை சரிசெய்ய முயற்சித்தனர். ஆனால் அதில் ராகுல் திவாட்டியா 10 (15) ரன்களில் அக்சர் படேல் சுழலில் அவுட்டானார். இறுதியில் ரஷித் கான் தம்மால் முடிந்தளவுக்கு அதிரடியாக விளையாடி 31 (24) ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதனால் 17.3 ஓவேரிலேயே குஜராத் வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடந்த 2022இல் தோற்றுவிக்கப்பட்ட அந்த அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டம் வென்றதை அனைவரும் அறிவோம். இருப்பினும் இம்முறை புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இப்போட்டியில் மோசமாக விளையாடிய குஜராத் அணி தங்களுடைய கேரியரில் முதல் முறையாக 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரால் பயனில்ல.. வேணும்னா எங்ககிட்ட கத்துக்கோங்க.. முஸ்தபிசூர் பற்றி வங்கதேச நிர்வாகி கருத்து

இதற்கு முன் 2023 சீசனில் இதே டெல்லிக்கு எதிராக அஹமதாபாத் மைதானத்தில் 125/6 ரன்கள் எடுத்ததெ குஜராத்தின் முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும். அத்துடன் டெல்லிக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையும் குஜராத் படைத்துள்ளது. இதற்கு முன் 2012ஆம் ஆண்டு வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் டெல்லிக்கு எதிராக மும்பை 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே சாதனையாகும். அந்தளவுக்கு பந்து வீச்சில் தெறிக்க விட்ட டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3, இஷாந்த் சர்மா 2, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement