டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து புறக்கணிக்கப்பட்ட கே.எல் ராகுல்.. லக்னோ அணி நிர்வாகம் போட்ட எமோஷனல் பதிவு

KL-Rahul
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் ஜூன் மாதம் 2-ம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் வேளையில் ஏற்கனவே இந்த தொடருக்கான அட்டவணையும் வெளியாகி விட்டது. இந்நிலையில் எந்த அணி டி20 உலககோப்பையை கைப்பற்றப்போகிறது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை மே 1-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தது.

- Advertisement -

அதன் காரணமாக தற்போது அனைத்து அணிகளும் தங்களது உலகக்கோப்பை டி20 அணியை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யும் நேற்று ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது.

அந்த அணியில் முதன்மை வீரரான கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த ஓராண்டிற்கு பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய ரிஷப் பண்ட் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த வேளையில் அவரை இந்திய அணி தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

அதேபோன்று ராஜஸ்தான் அணியின் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சனையும் விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ள இந்திய அணி நிர்வாகம் கே.எல் ராகுலுக்கு வாய்ப்பினை மறுத்துள்ளது. இப்படி கே.எல் ராகுல் புறக்கணிக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : குப்பையான செலெக்சன்.. 22/4ன்னு விழுந்த இந்தியாவை காப்பாற்றிய ரிங்குவை பலிகிடாவாக்கியது நியாயமா? ஸ்ரீகாந்த் விமர்சனம்

இவ்வேளையில் கே.எல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் நிர்வாகம் அவர்களது சார்பில் கே.எல் ராகுலை ஆதரித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. அதில் “எப்போதுமே கே.எல் ராகுல் தான் எங்களுடைய நம்பர் ஒன்” என்று தங்களது அணியின் கேப்டனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அந்த பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement