அபிஷேக் – ஹெட்டை பிரிச்ச திட்டம் இது தான்.. அந்த 2 இந்திய பையன்களிடம் திறமை இருக்கு.. ஸ்டார்க் பேட்டி

Mitchell Starc 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக தகுதி பெற்ற சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அந்த அணி மே 21ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் 2வது இடத்தை பிடித்த ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அகமதாபாத் நகரில் நடந்த அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதெராபாத் 160 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 55, ஹென்றிச் க்ளாஸென் 32, கேப்டன் பட் கமின்ஸ் 30 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த கொல்கத்தா அணிக்கு அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 51*, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 58* ரன்கள் விளாசி 13.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் ஸ்டார்க்:
அதனால் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் எலிமினேட்டரில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது. கொல்கத்தா அணியின் இந்த வெற்றிக்கு ஆரம்பத்திலேயே டிராவிஸ் ஹெட்டை டக் அவுட்டாக்கி மொத்தம் 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய மிச்சல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஆரம்பத்திலேயே ஸ்விங் செய்து விட்த் கொடுக்காமல் ஸ்டம்ப் லைனில் பந்து வீசி டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கியதாக ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பவர் பிளே எவ்வளவு முக்கியம் என்பது எங்களுக்கு தெரியும். இந்த 2 அணிகளுமே பவர் பிளே ஓவர்களில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடியுள்ளனர். எனவே ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுத்து மிடில் ஆர்டரில் அழுத்தத்தை கொடுக்க வேண்டிய நிலைமை எங்களுக்கு ஏற்பட்டது. இந்த வருடம் முழுவதும் அபிஷேக் மற்றும் ஹெட் ஆகியோர் சுதந்திரமாக தங்களுடைய கைகளால் அடித்து நொறுக்கினர்”

- Advertisement -

“எனவே நாங்கள் அவர்களுக்கு எதிராக பந்தை ஸ்விங் செய்து அடிப்பதற்கு தேவையான அகலத்தை கொடுக்காமல் இருக்க முயற்சிப்போம். ஸ்டம்ப் லைனில் கடினமான லென்த்தில் வீச முயற்சித்தோம். எங்கள் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். எங்களுடைய மொத்த பவுலிங் துறையும் சிறப்பாக செயல்பட்டது. ஹெட் விக்கெட்டை அதிர்ஷ்டத்துடன் எடுத்தேன் என்று நினைக்கிறேன். ஆரம்பத்திலேயே கிடைத்த அந்த விக்கெட் எப்போதும் கிடைக்காது”

இதையும் படிங்க: 13.4 ஓவரிலேயே ஹைதராபாத்தை அதன் ரூட்டில் ஓடவிட்ட கொல்கத்தா.. கடைசி 6 ரூட்டில் ஃபைனல்.. அப்டினா கோப்பை ஃகன்பார்ம்

“சமீப காலங்களில் நாங்கள் எதிரெதிர் அணிகளில் விளையாடியுள்ளோம். வைபவ் அரோரோ – ஹர்ஷித் ராணா ஆகிய நுணுக்கங்களை கொண்ட திறமையான இந்திய வீரர்களை பார்ப்பது ஆர்வமாக இருக்கிறது. அவர்கள் கடினமாக பயிற்சி எடுக்கின்றனர். ஹர்ஷித் இந்த வருடம் சிறப்பாக செயல்படுகிறார். எங்களுடைய பவுலிங் அட்டாக் சிறப்பாக அற்புதமாக இருக்கிறது. ஒரு மூத்த வெளிநாட்டு வீரராக அதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. அவர்கள் இன்னும் ஐபிஎல் தொடரிலும் இந்தியாவுக்காகவும் விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறினார்.

Advertisement