- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர்தான்.. அவர் எல்லா பார்மேட்லயும் விளையாடனும் – நவ்ஜோத் சிங் சித்து கருத்து

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டியை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது. இந்திய அணியின் இந்த அசாத்தியமான பயணத்திற்கு தற்போதைய துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மாவும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. ஏனெனில் வலது கை, இடது கை துவக்க வீரர்களான இவர்கள் இருவரும் அதிரடியான துவக்கத்தை அமைக்கின்றனர். அதன் காரணமாகவே இந்திய அணி வெற்றியை நோக்கி மிக எளிதாக செல்கிறது.

இந்திய அணியின் அடுத்த விரேந்தர் சேவாக் இதுதான் : நவ்ஜோத் சிங் சித்து

அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணியானது முதல் விக்கெட்டிற்கே 9.5 ஓவர்களில் 105 ரன்கள் சேர்த்து வலுவான துவக்கத்தை அளித்தது. இதன் காரணமாக இந்த போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெறவும் முடிந்தது. அந்த அளவிற்கு சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் டி20 போட்டிகளில் தற்போது புதிய துவக்க வீரர்களாக இணைந்துள்ள அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் டி20 போட்டிகளில் மட்டுமில்லாமல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் இணைந்து விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது :

என்னை பொறுத்தவரை எல்லா விதமான போட்டிகளிலும் அபிஷேக் ஷர்மா இந்திய அணிக்காக விளையாட வேண்டும். ஏனெனில் ஏற்கனவே வீரேந்திர சேவாக் எப்படி மூன்று வகையான இந்திய அணிக்கும் மிகச் சிறப்பான அதிரடியான துவக்கத்தை அளித்தாரோ அதேபோன்று அடுத்த சேவாக் பிறந்து விட்டதாக நான் அபிஷேக் ஷர்மாவை பார்க்கிறேன். அந்த அளவிற்கு அபிஷேக் ஷர்மாவிடம் நிறைய திறமை இருக்கிறது.

- Advertisement -

அவர் சிக்ஸர் அடிக்கும்போது அவரை விட மிகச் சிறப்பாக சிக்சர் அடிக்கும் வீரரை பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. அப்படி ஒரு அற்புதமான பேட் ஸ்விங்கை அவர் வைத்துள்ளார். நிச்சயம் மூன்று வகையான இந்திய அணியிலும் அவர் இடம் பிடித்து விளையாடுவார் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது. அதை பார்க்க நான் காத்திருக்கிறேன் என நவ்ஜோத் சிங் சித்து அபிஷேக் ஷம்மாவை பாராட்டி பேசியுள்ளார்.

இதையும் படிங்க : கடவுள் என் பையனுக்கு கொடுத்த கிஃப்ட்.. அதனால் தான் இன்னைக்கு சாதிச்சிருக்கான் – அபிஷேக் தந்தை நெகிழ்ச்சி

இந்திய அணிக்காக கடந்த 2024-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான அபிஷேக் ஷர்மா முதல் 23 ஆட்டங்களிலேயே 50 சிக்ஸர்களை அடித்து சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த போட்டிகளிலும், குறைந்த பந்துகளிலும் 50 சிக்ஸர்களை கடந்த வீரர் என்ற சாதனையை உலகளவில் நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி 25 வயதான அவர் தற்போதைய டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -