கடவுள் என் பையனுக்கு கொடுத்த கிஃப்ட்.. அதனால் தான் இன்னைக்கு சாதிச்சிருக்கான் – அபிஷேக் தந்தை நெகிழ்ச்சி

Abhishek Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா கடந்த 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 77 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 9 அரைசதம் என 1816 ரன்களை குவித்துள்ளார். அதுதவிர்த்து கடந்த ஆண்டு ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து வெளியேறிய பின்னர் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் 21 போட்டியில் விளையாடி 2 சதம் மற்றும் 3 அரைசதம் என 708 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

கடவுள் என் மகனுக்கு கொடுத்த கிஃப்ட் அது : ராஜ்குமார் சர்மா

தற்போதைய இந்திய டி20 அணியின் முதன்மை துவக்க வீரராக விளையாடி வரும் அவர் ஆசிய கோப்பை தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த சூப்பர் போர் சுற்று ஆட்டத்தில் 39 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 74 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதினையும் வென்றுள்ளார்.

- Advertisement -

அவரது இந்த சிறப்பான அதிரடியான ஆட்டம் இந்திய அணிக்கு அதிகளவில் கை கொடுத்து வருவதால் அவரே அடுத்த 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராக அவரே களமிறங்கி விளையாட வேண்டும் என்ற ஆதரவுகளும் குவிந்து வருகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராகவும் அவர் தற்போது அனைவரும் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அபிஷேக் சர்மாவின் திறமை குறித்து பேசியுள்ள அவரது தந்தை சில சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் ஷர்மாவின் சிக்ஸ் ஹிட்டிங் திறமை என்பதை கடவுள் அவருக்கு கொடுத்த பரிசாக நான் பார்க்கிறேன். ஏனெனில் லைன் அன்ட் லென்த்தை மற்ற பேட்ஸ்மேன்களை விட சில நொடிகள் முன்கூட்டியே கணிக்கும் அவர் மிக எளிதாக பந்துகளை கணித்து அடிக்கிறார்.

- Advertisement -

அதோடு அவரிடம் இருக்கும் இயற்கையான டைமிங் மூலம் பந்துகள் மிக நீண்ட தூரமாக சென்று பெரிய சிக்ஸர்களாக மாறுகின்றன. அவரிடம் இருக்கும் திறமை என்பது சிறுவயதிலிருந்தே இருந்து வருகிறது. சுப்மன் கில்லுடன் சாதாரண நட்பையும் தாண்டி ஒரு சகோதரத்துவம் இருக்கிறது என்று தான் நான் கருதுகிறேன். ஏனெனில் அவர்கள் இருவருமே 10-11 வயதில் இருந்து ஒன்றாக விளையாடுகின்றனர்.

இதையும் படிங்க : தோனி மாதிரி ஹெலிகாப்டர் அடிச்ச அபிஷேக்.. அதுல குரு யுவ்ராஜ் மாதிரி வருவாரு.. அஸ்வின் பேட்டி

பயிற்சி எடுக்கும் போதும் சரி, இந்தியாவுக்காக விளையாடும் போதும் சரி இருவரும் ஒன்றாகவே இருந்து வருகிறார்கள். சிறு வயதிலிருந்து அவர்கள் தற்போது கடந்து வந்துள்ள தூரம் மிகப்பெரியது. இந்திய அணிக்காக அவர்கள் இருவரும் துவக்க வீரர்களாக விளையாடுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அபிஷேக் ஷர்மாவின் தந்தை பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement