இதெல்லாம் ஜீரணிக்க முடியல.. தோனியை ஃபாலோ பண்ணுங்க.. பாண்டியாவுக்கு நவ்ஜோத் சித்து அட்வைஸ்

Navjot Sidhu
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்றுள்ளது. அதனால் ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்துள்ள மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது திண்டாடுகிறது. இதற்கிடையே ரோஹித் சர்மாவை கழற்றி விட்டு பாண்டியாவை கேப்டனாக நியமிப்பதற்காக மும்பை ரசிகர்களே உச்சகட்ட எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிராக சொந்த ஊரில் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தங்களுடைய கேப்டன் என்றும் பாராமல் பாண்டியாவுக்கு மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அதிருப்தியடைந்த முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் “லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன். பாண்டியா மும்பை கேப்டன். மரியாதை கொடுங்கள்” என்று கெஞ்சாத குறைவாக கேட்டார்.

- Advertisement -

தோனியை ஃபாலோ பண்ணுங்க:
ஆனாலும் அதையெல்லாம் மதிக்காத மும்பை ரசிகர்கள் தொடர்ந்து எதிராக குரல் கொடுத்தனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா தங்களுடைய கேப்டனாக இல்லாததை ஜீரணிக்க முடியாமலேயே மும்பை ரசிகர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதாக நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். அத்துடன் டேவோன் கான்வேவுக்கு பதிலாக ரச்சின் ரவீந்திராவை கண்டறிந்த தோனி தலைமையிலான சென்னை அணியை பாண்டியா பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய கேப்டனாக இருக்கும் தங்களுடைய ஹீரோ மும்பை அணியின் கேப்டனாக இல்லாததை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. ரோஹித் என்ன தவறு செய்தார்? வெற்றியைப் போல் வெற்றி என்பது எதுவுமில்லை. கடைசி 2 ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றிருந்தால் அனைவரும் அமைதியாக இருந்திருப்பார்கள்”

- Advertisement -

“என்னை பொறுத்த வரை பாண்டியா அணியின் கலவையில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் ஹைதராபாத்துக்கு எதிராக 277 ரன்கள் கொடுத்ததால் உங்களுடைய பவுலிங் இல்லை என்று அனைவரும் அலறுகின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களுக்கு எதிராக ஒரு அணி எப்படி 277 ரன்கள் அடித்தது? குஜராத்துக்கு எதிரான போட்டியிலும் மும்பை நெருக்கமாக வெற்றியை விட்டது”

இதையும் படிங்க: இது தெரியாதா.. அணிக்காக அதை செய்யலான மரியாதை எப்படி கிடைக்கும்.. பாண்டியாவை விளாசிய இர்பான் பதான்

“எனவே மும்பை தோற்கடிக்கப்பட்டனர். அவமானப் படுத்தப்படவில்லை. இந்த நேரத்தில் தோனி என்ன செய்கிறார் என்பதை பாருங்கள். கடந்த வருடம் அதிக ரன்கள் அடித்த டேவோன் கான்வே இம்முறை காயத்தை சந்தித்துள்ளார். அந்த இடத்தில் கிட்டத்தட்ட அதே போன்ற ரச்சின் ரவீந்தராவை அவர் கொண்டு வந்துள்ளார். பாண்டியாவும் அது போன்ற வீரர்களை கண்டறிய வேண்டும் அல்லது உங்களுடைய பலவீனங்கள் வெளிப்படுத்தப்படும்” என்று கூறினார்.

Advertisement