இது தெரியாதா.. அணிக்காக அதை செய்யலான மரியாதை எப்படி கிடைக்கும்.. பாண்டியாவை விளாசிய இர்பான் பதான்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற்ற 14வது லீக் போட்டியில் மும்பையை 6 வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. அதனால் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை சுமாராக விளையாடி 125/9 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியை ஆரம்பத்திலேயே கோட்டை விட்டது.

அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 34, திலக் வர்மா 32 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட், சஹால் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் 126 ரன்களை துரத்திய ராஜஸ்தான் 15.3 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து எளிதாக வென்றது. அதிகபட்சமாக ரியன் பராக் 54* (39) ரன்கள் அடித்த நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

மரியாதை வராது:
அந்த வகையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்த சீசனில் இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் தோற்ற மும்பை ஹாட்ரிக் தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது. முன்னதாக இந்த தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கேப்டனாக செயல்பட்டு வரும் பாண்டியாவுக்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த சூழ்நிலையில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பைக்கு ரோகித் சர்மா, நமன் திர், தேவாலட் ப்ரேவிஸ் ஆகியோர் ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் கோல்டன் டக் அவுட்டானார்கள். அதனால் 14/3 என தடுமாறிய மும்பைக்கு அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் பாண்டியா அதிரடியாக விளையாடினார். எதிர்புறம் திலக் வர்மா சூழ்நிலையை அறிந்து நிதானமாக விளையாடினார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாகவே விளையாடிய பாண்டியா 6 பவுண்டரியுடன் 34 (21) ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்யாமல் சென்றார்.

- Advertisement -

இந்நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் அணி தடுமாறும் போது நன்கு செட்டிலான பேட்ஸ்மேன் கடைசி வரை போட்டியை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது கூட தெரியாதா என பாண்டியாவை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் பாண்டியாவை பற்றி 3வது முறையாக அவர் ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு. “கிரிக்கெட்டை புரிந்தவர்களுக்கு இது நன்றாக தெரியும். அதாவது நீங்கள் செட்டிலாகும் பட்சத்தில் உங்கள் அணியை முழுமையாக பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: உங்க மனசு பெருசு ஹிட்மேன்.. பாண்டியாவுக்காக அதே பவுண்டரி எல்லையில் ரோஹித் செய்த நெகிழ்ச்சியான செயல்

“எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் உங்களுடைய கேப்டன் கடினமான விஷயங்கள் செய்வதை நீங்கள் விரும்புவீர்கள். ஒருவேளை அவர் அதைச் செய்யாமல் போனால் அவரால் தன்னுடைய அணியின் மரியாதையை சம்பாதிக்க முடியாது” என்று கூறியுள்ளார். அந்த வகையில் ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்துள்ள மும்பை பிளே ஆஃப் செல்ல அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement