உங்க மனசு பெருசு ஹிட்மேன்.. பாண்டியாவுக்காக அதே பவுண்டரி எல்லையில் ரோஹித் செய்த நெகிழ்ச்சியான செயல்

- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற்ற 14வது லீக் போட்டியில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 125/9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே வெற்றியை கோட்டை விட்டது. அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 34, திலக் வர்மா 32 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3, சஹால் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 127 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ரியான் பராக் 54* (39) ரன்கள் அடித்து 15.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தார். அதனால் 3 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது.

- Advertisement -

ரோகித்தின் செயல்:
மறுபுறம் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் 3 தோற்று ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்துள்ள மும்பை கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ளது. முன்னதாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த நன்றி மறந்த மும்பை நிர்வாகம் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு இந்த வருடம் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது.

அதற்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் உச்சகத்தை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு ஹர்திக் பாண்டியா வற்புறுத்தியது ரசிகர்களின் கோபத் தீயில் எண்ணையை ஊற்றியது. அதனால் கடும் அதிருப்தியடைந்த மும்பை ரசிகர்கள் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தங்களுடைய கேப்டன் என்றும் பாராமல் உச்சகட்ட பாண்டியாவுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.

- Advertisement -

அப்போது டாஸ் வீசுவதற்காக வந்த ஹர்டிக் பாண்டியாவுக்கு ஆதரவு கொடுக்குமாறு முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் வெளிப்படையாக கேட்டுக் கொண்டார். ஆனாலும் அதையெல்லாம் கேட்காத மும்பை ரசிகர்கள் தொடர்ந்து பாண்டியாவுக்கு எதிர்ப்பு சத்தங்களை வெளிப்படுத்தினர். அதனால் சங்கடமான ரோஹித் சர்மா பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த போது “போதும் விடுங்க, பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை நிறுத்துங்க” என்று மும்பை ரசிகர்களிடம் அன்பான வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: மும்பை அணியை நாங்கள் வீழ்த்த திருப்புமுனையே இதுதான்.. வெற்றிக்கு பிறகு – சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

அதை பார்த்த ரசிகர்கள் பாண்டியா ஃபீல்டிங் செய்யுமாறு சொன்ன அதே பவுண்டரி எல்லையில் இருந்து அவருக்கு எதிராக குரல் கொடுப்பதை நிறுத்துமாறு சொல்லும் உங்க மனசு பெரிசு ஹிட்மேன் என்று ரோகித் சர்மாவை பாராட்டி வருகின்றனர். ஆனாலும் 3 மோசமான தோல்விகளை சந்தித்ததால் இப்போதும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக மும்பை ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement