மும்பை அணியை நாங்கள் வீழ்த்த திருப்புமுனையே இதுதான்.. வெற்றிக்கு பிறகு – சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி

Samson
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியது. அதோடு மும்பை அணி பெற்ற இந்த தோல்வியுடன் சேர்த்து இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி ராஜஸ்தான அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக திலக் வர்மா 32 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 34 ரன்களையும் குவித்தனர். பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 15.3 ஓவர்களில் 4 விக்க்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக ரியான் பராக் 39 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் தான் திருப்புமுனையாக அமைந்ததாக நினைக்கிறேன். ஆரம்பத்தில் பந்து நின்று வருவதாக ஆரம்பத்திலேயே உணர்கிறோம். ட்ரென்ட் போல்ட் மற்றும் பர்கர் ஆகியோர் அவர்களது அனுபவத்தை பயன்படுத்தி எங்களுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். இவ்வளவு சீக்கிரமாக 4-5 விக்கெட்டுகள் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இருப்பினும் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தனர்.

இதையும் படிங்க : என்னோட விக்கெட் விழுந்ததும் அவங்க கேமுக்குள்ள வந்துடாங்க.. தோல்விக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா திமிர் பேச்சு

எங்களது அணியில் உள்ள அனைவருமே தனித்துவம் வாய்ந்தவர்கள். அந்த வகையில் இந்த போட்டியின் போது அனைவருமே தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர். அஸ்வின் மற்றும் சாகல் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக சாஹல் எங்களது அணிக்காக கடந்த 2-3 வருடங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் இன்னும் சிறப்பாக இருக்கும் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement