என்னோட விக்கெட் விழுந்ததும் அவங்க கேமுக்குள்ள வந்துடாங்க.. தோல்விக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா திமிர் பேச்சு

Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி :

ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே குவித்தது. மும்பை அணி சார்பாக திலக் வர்மா 32 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 34 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியானது 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக ரியான் பராக் ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்த இரவு உண்மையிலேயே எங்களுக்கு கடினமாக இருந்தது. நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கின்போது சிறப்பாக ஆரம்பிக்கவில்லை. விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த வேளையில் நான் கவுண்டர் செய்து விளையாட நினைத்தேன்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் நாங்கள் 150 முதல் 160 ரன்கள் வரை வரும் அளவிற்கு டீசன்டான நிலைமையில் தான் இருந்தோம். ஆனால் என்னுடைய விக்கெட் விழுந்ததின் பின்னர் ராஜஸ்தான் அணி முழுவதுமாக ஆட்டத்திற்குள் வந்து விட்டார்கள். நான் இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : இந்த வருஷம் அசத்துவதற்கு.. இதான் என்னோட சிம்பிளான திட்டம்.. கோலிக்கு நிகராக சாதித்த ரியன் பேட்டி

இதுபோன்ற மைதானத்தில் தோல்வி என்பது எதிர்பாராத ஒன்றுதான் இருப்பினும் நிச்சயம் இதிலிருந்து திரும்ப வர முடியும் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக நாங்கள் இன்னும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம் என ஹார்டிக் பாண்டியா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement