எந்த அணிக்கும் லாஸ் தான்.. ஹர்டிக் பாண்டியா இல்லாததால் குஜராத் மண்ணை கவ்வியதா? கேப்டன் கில் பதில்

Shubman Gill GT
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. அதே போல முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் 3வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இந்த 2 அணியின் தோல்விகளுக்கும் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக திகழ்கிறார் என்றே சொல்லலாம்.

முதலாவதாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக குஜராத்திடமிருந்து வாங்கி கேப்டனாக அறிவித்தது. அதற்கு இப்போது வரை மும்பை ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் விளையாடிய மும்பை அணி பாண்டியா தலைமையில் தோல்வியை சந்தித்து தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது.

- Advertisement -

பாண்டியா இல்லாமல்:
மறுபுறம் 2022இல் தோற்றுவிக்கப்பட்ட குஜராத் அணிக்கு மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா அனுபவமற்ற கேப்டன்ஷிப் பதவியில் அனைத்து வீரர்களையும் அபாரமாக வழி நடத்தினார். அதனால் முதல் வருடத்திலேயே குஜராத்துக்கு கோப்பையை வென்று கொடுத்த அவர் அடுத்த வருடம் ஃபைனல் வரை அழைத்துச் சென்றார். அப்படிப்பட்ட மகத்தான அவரை இம்முறை டிரேடிங் முறையில் மும்பைக்கு கொடுத்தது குஜராத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம்.

ஏனெனில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத சுப்மன் கில் தலைமையில் முடிந்தளவுக்கு போராடிய குஜராத் தங்களுடைய கேரியரில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர் இல்லாதது குஜராத் மட்டுமின்றி உலகின் எந்த அணிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இருப்பினும் பாண்டியா இல்லாதது மட்டும் தங்களுடைய தோல்விக்கு காரணம் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா பாய் போன்ற தரத்தை கொண்ட வீரர் இல்லாதது எந்த ஒரு அணியின் சேர்க்கையையும் பாதிக்கும். ஆனால் விளையாட்டின் அழகு என்னவெனில் இங்கே ஒருவரால் மட்டும் வெற்றி பெற முடியாது. இங்கே அனைவரும் ஒன்றாக சேர்ந்து அணியாக குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் மட்டுமே வெற்றி காண முடியும்”

இதையும் படிங்க: ஃபார்ம் தான் பேசும்.. சிஎஸ்கே – ஆர்சிபி வாழ்வா – சாவா போட்டியின் வெற்றியாளரை கணித்த பிரையன் லாரா

“அதை செய்யும் அணிகள் நன்றாக செயல்படுகின்றன. கடந்த 16 வருடங்களில் வெற்றிகளைப் பெற்ற அணிகளை நீங்கள் பார்த்தால் அவர்கள் ஒன்றாக விளையாடி இருப்பார்கள். 1 அல்லது 2 – 3 வீரர்கள் மட்டும் மொத்த சீசனையும் மாற்றியதை நீங்கள் பார்த்திருக்க முடியாது” என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement