இந்த வருஷம் அசத்துவதற்கு.. இதான் என்னோட சிம்பிளான திட்டம்.. கோலிக்கு நிகராக சாதித்த ரியன் பேட்டி

Riyan Parag 4
- Advertisement -

ஐபிஎல் 20204 டி20 தொடரில் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற்ற 14வது லீக் போட்டியில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் எளிதாக தோற்கடித்தது. அதனால் 3 போட்டிகளில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் பாண்டியா தலைமையில் 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த மும்பை கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ளது.

வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை சுமாராக விளையாடி 125/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 34, திலக் வர்மா 32 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3, சஹால் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் 127 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ரியான் பராக் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 54* (39) ரன்கள் அடித்து 15.3 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

கோலிக்கு நிகராக:
கடந்த 2019 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 5 வருடங்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து சுமாராக செயல்பட்டதால் கடுமையான விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்தார். ஆனால் இந்த வருடம் இதுவரை நடந்த 3 போட்டிகளில் முறையே 43, 84*, 54* என மொத்தம் 181 ரன்கள் அடித்துள்ள அவர் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதனால் விராட் கோலிக்கு நிகராக தற்போது ஆரஞ்சு தொப்பியையும் அவர் அணிந்துள்ளார். இந்நிலையில் பந்தை பார்த்து அடிக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டுள்ள தமக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியது போல் இந்த வருடம் 4வது இடத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததே இப்படி அசத்துவதற்கு காரணம் என்று ரியான் பராக் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“என்னிடம் எதுவும் மாறவில்லை. சில விஷயங்களை எளிமைப்படுத்தி விட்டேன். இதற்கு முன் நான் சில அம்சங்களை பற்றி அதிகமாக சிந்திப்பேன். இந்த வருடம் பந்தை பார்த்து அடிப்போம் என்பதே என்னுடைய எளிதான இலக்காகும். ஏற்கனவே சொன்னது போல் உள்நாட்டு கிரிக்கெட்டில் சரியாக இந்த இடத்தில் தான் பேட்டிங் செய்வேன். அதே போல ஜோஸ் அவுட்டானதும் இப்போது நான் பேட்டிங் செய்கிறேன்”

இதையும் படிங்க: ரோஹித்தை பற்றி எனக்கு தெரியாதா.. டக் அவுட்டாக்கிய திட்டம் இது தான்.. ஆட்டநாயகன் ட்ரெண்ட் போல்ட் பேட்டி

“பொதுவாக இந்த இடத்தில் தான் நான் உள்ளூரில் விளையாடுவேன். கடந்த 3 – 4 வருடங்களாக நான் சிறப்பாக செயல்படவில்லை. அப்போதெல்லாம் நீங்கள் வரைபடப் பலகைக்கு செல்ல வேண்டும். அங்கே இது போன்ற சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நான் கடினமான பயிற்சிகளை செய்தேன். எனது அப்பா வீட்டில் இருந்து எல்லாவற்றையும் பார்க்க விரும்புவார். அவர் அனைத்தையும் அலசக்கூடியவர். ஆனால் அம்மா இங்கே என்னுடைய ஆட்டத்தை பார்க்கிறார்” என்று கூறினார்.

Advertisement