ராகுல், பண்ட் கிடையாது.. ரோஹித்துக்கு பின் அவர் தான் தகுதியான டெஸ்ட் கேப்டன்.. சித்து தேர்வு

Navjot Sidhu 4
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டனாக விராட் கோலிக்கு பின் ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா 3 வகையான கிரிக்கெட்டிலும் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. அத்துடன் ரோஹித் தலைமையில் 2023 ஆசிய கோப்பையையும் இந்தியா வென்றது.

ஆனால் அதைத் தவிர்த்து 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் தோல்வியை சந்தித்த இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் மண்ணை கவ்வியது. அதனால் 2024 டி20 உலகக் கோப்பைக்கு பின் 36 வயதை தாண்டி விட்ட ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இந்தியாவுக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சித்து தேர்வு:
அது போன்ற நிலையில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதித்து காட்டியுள்ள ரிசப் பண்ட் காயத்திலிருந்து மீண்டும் குணமடைந்து வந்துள்ளதால் கேப்டனாக நியமிக்கப்பட பிரகாச வாய்ப்புள்ளது. அதே போல ஏற்கனவே துணை கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் இந்திய டெஸ்ட் அணியை வழி நடத்துவதற்கான வாய்ப்புள்ளது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக செயல்படுவதற்கு ஜஸ்பிரித் பும்ரா தகுதியானவர் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்கும் போது பிசிசிஐ முன்கூட்டியே திட்டங்களை வகுத்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா மற்றுமொரு கொண்டாடப்படாத ஹீரோ. நாம் விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனியை பற்றி அதிகமாக பேசுகிறோம். ஆனால் பும்ரா தன் மீதான எதிர்பார்ப்புகளை சிறப்பாக கையாண்டு வருகிறார். காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த அவர் தற்போது பந்தை எப்படி பேச வைக்கிறார் என்பதை பாருங்கள்”

- Advertisement -

“எனவே அவர் தான் துணைக் கேப்டனாக தேர்வு செய்ய இயற்கையான தேர்வாகும். அதனால் ஜஸ்பிரித் பும்ராவை உங்களுடைய டெஸ்ட் கேப்டனாக வைத்துக் கொள்ளலாம். ஒருவரை கேப்டனாக தேர்வு செய்ய பல்வேறு அம்சங்களை நீங்கள் பார்க்க வேண்டும். ஆனால் பும்ரா ஏற்கனவே இங்கிலாந்து தொடரில் கேப்டனாக செயல்பட்டுள்ளதால் அந்த பதவிக்கு தகுதியானவர்” என்று கூறினார்.

இதையும் படிங்க: மயங் யாதவ் ஸ்பெஷல் டேலண்ட்.. இந்திய வாய்ப்புக்கு முன் 2 வருஷம் இதை செய்ங்க.. இயன் பிஷப் அட்வைஸ்

அவர் கூறுவது போல காயங்களைத் தாண்டி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் பும்ரா இந்தியாவின் மேட்ச் வின்னராக செயல்பட்டு சமீபத்தில் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்தார். எனவே 2022 இங்கிலாந்து தொடரின் 5வது போட்டியில் கேப்டனாக செயல்பட்ட அவர் இந்திய டெஸ்ட் அணியை வழி நடத்துவதற்கு தகுதியானவர் என்றால் மிகையாகாது.

Advertisement