மயங் யாதவ் ஸ்பெஷல் டேலண்ட்.. இந்திய வாய்ப்புக்கு முன் 2 வருஷம் இதை செய்ங்க.. இயன் பிஷப் அட்வைஸ்

Ian Bishop 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்காக இந்த வருடம் அறிமுகமான மயங் யாதவ் அதிரடியாக பந்து வீசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். வெறும் 21 வயதாகும் அவர் பஞ்சாப்புக்கு எதிரான முதல் போட்டியிலேயே 145 – 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதைத் தொடர்ந்து பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் 157 மீட்டர் வேகத்தில் வீசிய அவர் 2024 ஐபிஎல் தொடரின் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்து 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் 2 போட்டிகளிலும் 2 ஆட்டநாயகன் விருது வென்ற முதல் வீரர் என்ற மாபெரும் சரித்திரத்தையும் அவர் படைத்தார்.

- Advertisement -

பிஷப் ஆலோசனை:
மேலும் உம்ரான் மாலிக் போல இல்லாமல் நல்ல லைன், லென்த் ஆகியவற்றையும் பின்பற்றுவதால் அவரை டி20 உலகக் கோப்பை, 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியாவுக்காக விளையாட வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் தன்னுடைய 3வது போட்டியிலேயே காயத்தை சந்தித்த மயங் யாதவ் அடுத்ததாக எப்போது விளையாடுவார் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் மயங் யாதவ் ஸ்பெஷலான திறமையை கொண்டிருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் இயன் பிஷப் பாராட்டியுள்ளார். ஆனால் 21 வயதில் இவ்வளவு வேகத்தில் வீசும் அவரால் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட காலம் தாக்குப் பிடித்து விளையாட முடியுமா என்பதை முதலில் ஒரு பிரத்யேக உடற்பயிற்சி நிபுணரை நியமித்து 2 வருடங்கள் சோதிக்க வேண்டும் என்றும் இயன் பிஷப் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கடந்த ஒரு வாரமாக இந்த ஐடியாவை என்னுடைய நண்பருடன் தனிப்பட்ட முறையில் விவாதித்து வந்தேன். மயங் யாதவின் ஸ்பெஷல் டேலெண்ட் பற்றி விவாதித்தேன். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவரை கண்காணிக்க தனிப்பட்ட வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளரை நியமித்து எப்படி செயல்படுகிறார் என்ற சோதனையை கிரிக்கெட்டில் ஆராய்வதற்கு இது சரியான நேரம்” என்ற கூறியுள்ளார்.

முன்னதாக இவ்வளவு வேகத்தில் பந்து வீசும் மயங் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால் வீணாகி விடுவார் என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்திருந்தார். எனவே அவரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாட வைத்து சரியான முறையில் பயன்படுத்துமாறு வாட்சன் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement