1996 கதை தெரியுமா? பாகிஸ்தானை வீழ்த்துவதா நினச்சு ஆப்பு வெச்சுக்காதீங்க.. இந்தியாவை எச்சரித்த ரசித் லதீப்

Rashid Latif
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில்லை. அத்துடன் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பைகளில் மட்டும் வேண்டாத வெறுப்பாக இந்தியா – பாகிஸ்தான் மோதி வருகின்றன என்றே சொல்லலாம். ஏனெனில் எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என்று இந்தியா அடம் பிடித்து வருகிறது.

குறிப்பாக பாகிஸ்தானில் நடந்த 2023 ஆசிய கோப்பையில் விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றியும் கண்டது. அதற்கு பதிலடியாக இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தானும் அடம் பிடித்தது. ஆனால் ஐசிசி நிர்வாகத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை எதிர்த்து பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை.

- Advertisement -

1996 உலகக் கோப்பை மாதிரி:
அத்துடன் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதன் காரணமான உலகக் கோப்பையை புறக்கணித்தால் ஐசிசியின் பங்கு பணம் கிடைக்காமல் போய்விடும். அதனால் வேறு வழியின்றி இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெற உள்ள 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா மீண்டும் விளையாடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தங்களை வீழ்த்துவதாக நினைத்து 2025 சாம்பியன்ஸ் டிராபியை புறக்கணித்தால் அது இந்தியாவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லதீப் எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “நீங்கள் இருதரப்பு தொடரில் விளையாட மாட்டோம் என்று மறுப்பு தெரிவிக்கலாம். ஆனால் ஐசிசி தொடர்களுக்கு மறுப்பு தெரிவிப்பது மிகவும் கடினமாகும்”

- Advertisement -

“ஒரு தொடருக்கு ஐசிசி திட்டத்தை வரையும் போதே 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு சென்று பாகிஸ்தான் விளையாடியதைப் போல அனைத்து அணிகளுக்கும் நாம் எங்கே சென்று விளையாட வேண்டும் என்பது தெரிந்து விடும். அதற்கு சம்மதம் தெரிவித்து அனைத்து நாட்டு வாரியங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன. எனவே ஐசிசி தொடர்களுக்கு மறுப்பு தெரிவிப்பது கொஞ்சம் கடினமாகும். 1996 உலகக் கோப்பையில் இலங்கைக்கு சென்று விளையாட மாட்டோம் என்று ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மறுப்பு தெரிவித்தனர்”

இதையும் படிங்க: பாண்டியாவின் இந்த முடிவை ஏத்துகவே முடியல.. மும்பை ஓனர் ஸ்ட்ரிக்டான ஆக்சன் எடுக்கனும்.. சேவாக் பேட்டி

“அதனால் மொத்த பிரிவும் மாற்றப்பட்டது. கடைசியில் இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது. அது மிகப்பெரிய தவறாகும். இந்தியா அல்லது பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அங்கு சென்று விளையாட வேண்டும். ஒருவேளை அரசு தலையிட்டால் நீங்கள் நியாயமான காரணத்தை தெரிவிக்கலாம். எனவே பாகிஸ்தானில் சூழ்நிலைகள் சரியில்லை என்று சொல்லி நீங்கள் இருதரப்பு தொடர்களை தவிர்க்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரை ஐசிசி தொடரை நீங்கள் புறக்கணிப்பது உங்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

Advertisement