இந்தியாவின் பயிற்சியாளரா வரச்சொல்லி பிசிசிஐ கேட்டாங்க.. ஆனா இந்த காரணத்தால் மறுத்துட்டேன்.. பாண்டிங் ஓப்பன்டாக்

Ricky Ponting 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். கடந்த 2016 முதல் பெங்களூருவில் உள்ள என்சிஏ இயக்குனராக செயல்பட்ட அவர் அண்டர்-19 இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார். அதன் பின் ரவி சாஸ்திரி பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து 2021 டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளராக ட்ராவிட் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருடைய தலைமையில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா ஐசிசி தொடர்களில் தோல்வியையே சந்தித்தது. அந்த நிலையில் கடந்த 2023 உலகக் கோப்பையுடன் அவருடைய பதவி காலம் முடிவுக்கு வந்தது. அப்போது நீட்டிக்கப்பட்ட அவருடைய பதவிக்காலமும் அடுத்ததாக நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையுடன் முடிகிறது.

- Advertisement -

மறுத்த பாண்டிங்:
எனவே புதிய பயிற்சியாளரை நியமிக்க வலையை விரித்துள்ள பிசிசிஐ கௌதம் கம்பீர், ஸ்டீபன் பிளெமிங், விவிஎஸ் லக்ஷ்மன், ஜஸ்டின் லாங்கர், ஆசிஸ் நெஹ்ரா போன்ற முன்னாள் வீரர்களை அணுகியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட பிசிசிஐ தம்மையும் அழைத்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் வைத்துள்ளார். இருப்பினும் டெல்லி ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக இருப்பதாலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதாலும் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக பாண்டிங் கூறியுள்ளார்.

இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அது பற்றி நிறைய செய்திகள் வெளிவந்ததை நான் பார்த்தேன். பொதுவாக இது போன்ற செய்திகள் உங்களுக்கு தெரிவதற்கு முன்பாகவே சமூக வலைதளங்களில் வந்து விடும். இருப்பினும் ஐபிஎல் தொடரின் போது அது பற்றி என்னிடம் நேருக்கு நேராக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக அந்த பதவியில் செயல்பட விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டது”

- Advertisement -

“ஒரு தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பதை நான் விரும்புகிறேன். இருப்பினும் என்னுடைய வாழ்க்கையில் கூடுதலாக சில அம்சங்கள் இருக்கிறது. குறிப்பாக வீட்டில் கொஞ்சம் நேரத்தை செலவிட விரும்புகிறேன். இந்திய அணியுடன் வேலை செய்ய வேண்டிய நிலைமை வந்தால் உங்களால் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக இருக்க முடியாது என்பது எங்களுக்கு தெரியும்”

இதையும் படிங்க: மறுபடியும் வலிக்குது.. ஆனா அதுக்காக பெருமைப்படுறேன்.. அடுத்த கோப்பை ஆர்சிபி’க்கே.. கலங்கிய ஏபிடி

“அத்துடன் தேசிய அணிக்கு ஒரு வருடத்தில் 10 முதல் 11 மாதங்கள் வரை வேலை செய்ய வேண்டும். எனவே அது என்னுடைய தற்போதைய வாழ்க்கை முறைக்கு பொருந்தாது. இந்த நேரத்தில் ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் பிளமிங் ஆகியோருடைய பெயர்களும் அந்த பட்டியலில் இருப்பதாக நான் பார்த்தேன். கௌதம் கம்பீரின் பெயரும் கடந்த சில நாட்களாக வலம் வருகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக ஏற்கனவே சொன்ன காரணத்தால் என்னால் அந்த வேலையை ஏற்க முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement