2024 டி20 உ.கோ அணியில் சுமாரான பாண்டியாவுக்கு பதில் ரிங்குவை செலக்ட் பண்ணுங்க.. முன்னாள் பாக் வீரர்

Indian Team
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் விளையாடுவதற்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்து நடராஜன் போன்ற ஒருவர் கூட தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது பல முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஏனெனில் ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து கொல்கத்தாவுக்கு அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் 2023 அயர்லாந்து தொடர், ஆசிய போட்டிகள், ஆஸ்திரேலிய தொடர், தென்னாப்பிரிக்க தொடர், 2024 ஆப்கானிஸ்தான் தொடர்களில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

- Advertisement -

பாண்டியாவுக்கு பதிலாக ரிங்கு:
அதனால் தோனிக்கு பின் இந்தியாவுக்கு சிறந்த ஃபினிஷராக ரிங்கு கிடைத்து விட்டார் என்று பலரும் பாராட்டினர். இருப்பினும் அப்படிப்பட்ட அவரை 2024 ஐபிஎல் தொடரில் பெரிய ரன்கள் எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தேர்வுக் குழு கழற்றி விட்டுள்ளது. ஆனால் அதே ஐபிஎல் தொடரில் பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தாமல் மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த ஹர்திக் பாண்டியா இந்தியாவின் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரின் ஃபார்மை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பை அணியில் நீக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். அவருக்கு பதிலாக ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கும் கனேரியா இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியா எப்போதும் தரமான வீரர்களை உருவாக்கும் பெருமையைக் கொண்டது”

- Advertisement -

“சமீப காலங்களில் ஜெய்ஸ்வால், ரகுவன்ஷி ஆகியோர் அதற்கு எடுத்துக்காட்டு. மயங் யாதவ் தன்னுடைய அதிரடியான வேகத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதே போல அபிஷேக் ஷர்மா தன்னுடைய அதிரடியான பேட்டிங்கை காண்பித்தார். ரிங்குவை பொறுத்த வரை அவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று நானும் கருதுகிறேன்”

இதையும் படிங்க: எதுவும் சொல்லக்கூடாதா? கவலையின்னு சொல்லிட்டு எங்களுக்கே பதிலடியா.. விராட் கோலியை விளாசிய கவாஸ்கர்

“ஒருவேளை நான் ஐபிஎல் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து தேர்வு செய்தால் ஹர்திக் பாண்டியா தான் அந்த அணியில் தவற விடப்பட வேண்டும். அவர் தொடர்ச்சியாக அசத்தவில்லை. உங்களிடம் ஏற்கனவே சிஎஸ்கே அணியில் அசத்தி வரும் சிவம் துபே இருக்கிறார். மொத்தமாக பார்க்கும் போது இந்திய அணி நன்றாகவே இருக்கிறது. ஆனால் மிடில் ஆர்டரில் சிவம் துபேவுடன் ரிங்கு சிங் இருப்பது இந்திய அணிக்கு தவறான சேர்க்கையை கொடுக்கும்” என்று கூறினார்.

Advertisement