தோனிக்கு அப்றம் அவர் தான் சிஎஸ்கே அணியின் ஃபினிஷர்.. இளம் இந்திய வீரருக்கு.. நவ்ஜோத் சித்து ஆதரவு

Navjot Sidhu 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனாக விளையாடி வருகிறது. அதில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி 1 தோல்வியை பதிவு செய்துள்ள அந்த அணி கோப்பையை தக்க வைக்கும் பயணத்தில் போராடி வருகிறது. முன்னதாக 42 வயதை கடந்துவிட்ட தோனி வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை இந்த வருடம் ருதுராஜ் கையில் ஒப்படைத்தார்.

அத்துடன் மகத்தான ஃபினிஷர் என்று போற்றப்படும் அவர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் 8வது இடத்தில் பேட்டிங் செய்து வருகிறார். அந்த வகையில் கேப்டன்ஷிப் போலவே ஃபினிஷிங் செய்யும் வேலையையும் சிவம் துபே, சமீர் ரிஸ்வி போன்ற இளம் வீரர்களிடம் தோனி மறைமுகமாக ஒப்படைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

தோனிக்கு பின்:
மறுபுறம் 2023 கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய சிவம் துபே இம்முறையும் தோனியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு பங்காற்றி வருகிறார். அதே போல 8.40 கோடிக்கு வாங்கப்பட்ட சமீர் ரிஸ்வி குஜராத்துக்கு எதிரான அறிமுகப் போட்டியில் தனது கேரியரின் முதல் பந்திலேயே ரசித் கானுக்கு எதிராக சிக்சர் அடித்து 14 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்நிலையில் தோனிக்கு பின் வருங்காலங்களில் சமீர் ரிஸ்வியை ஃபினிஷராக பயன்படுத்துவதற்கு சிஎஸ்கே நிர்வாகம் நம்பி வாய்ப்பு கொடுக்கலாம் என முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார். இது பற்றி தொகுப்பாளரின் கேள்விக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “வாய்ப்பு கொடுக்காமல் திறமை வெளிப்படாது. நீங்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்”

- Advertisement -

“வாய்ப்பு கொடுப்பதும் அதை அந்த வீரர்கள் சவாலாக ஏற்றுக் கொள்வதில் தான் திறமை வெளிப்படும். எனவே அந்த தன்னம்பிக்கையுடன் நீங்கள் ரிஸ்விக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரு கோப்பையில் இருக்கும் வினிகரை விட ஒரு சொட்டு தேன் மிகவும் ருசியானது. எனவே சரியான இடத்திற்கு சரியானவரைப் பொருத்துவது மிகவும் முக்கியம். தோனி பேட்டிங் செய்து ஃபினிஷிங் செய்யும் போது ஒரு சொத்து. தோனியும் ஜடேஜாவும் சேர்ந்தால் 1 மற்றும் 1 சேரும் 11 நம்பரை போன்றதாகும்”.

இதையும் படிங்க: முதல் ஓவர்லேயே தோற்கப் போறது தெரிஞ்சுடுச்சு.. அதையாச்சும் செஞ்சுருக்கலாம்ல.. ரிஷப் பண்ட்டை விமர்சித்த சேவாக்

“தோனி நிரூபிப்பதற்கு எதுவுமில்லை. எனவே வருங்கால தலைவர்களை உருவாக்குவதே மிகப்பெரிய பலமாகும். உண்மையாக அவர் இளம் வீரர்களை கொண்டு வருகிறார். மற்ற அணிகளில் தடுமாறும் வீரர் தோனியிடம் வந்ததும் முழுமையாக மாறுவது எப்படி? ஏனெனில் ஒரு நல்ல தலைவர் அந்த வீரரின் பின்புலத்தில் நடந்து நம்பிக்கையான ஆதரவை கொடுக்கிறார்” என்று கூறினார்.

Advertisement