168 ரன்களை வைத்தே பஞ்சாப் அணியை சுருட்டி வீசிய பிறகு வெற்றி குறித்து பேசிய – ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டி

Ruturaj
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் போட்டியானது தரம்சாலா நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பஞ்சாப் அணியின் சார்பாக அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களையும், ஷஷாங்க் சிங் 27 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : இந்த விக்கெட் மிகவும் மெதுவாக இருந்ததை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். இந்த மைதானத்தில் பெரிய அளவில் பவுன்சும் கிடைக்கவில்லை. அதனாலேயே நாங்கள் பொறுமையான துவக்கத்தை பெற்றோம். இருப்பினும் 180 முதல் 200 ரன்கள் வரை குவிக்க வேண்டும் என்ற நினைப்புடனே பேட்டிங் செய்தோம்.

- Advertisement -

ஆனால் இடையே அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 160 முதல் 170 ரன்கள் வரை வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அந்த வகையில் போதுமான அளவு ரன்கள் கிடைத்ததோடு பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக சிமர்ஜீத் சிங் 150 கிலோமீட்டர் வரை வேகத்தில் அற்புதமாக பந்து வீசினார். இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் தற்போது முக்கியமான நேரத்தில் அவருக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : 1.453 ரன்ரேட்.. லக்னோவை ஊதி தள்ளிய கொல்கத்தா.. மாஸ் வெற்றியால் பிளே ஆஃப் உறுதியானதா?

அதே வேளையில் இந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயராக பேட்ஸ்மேனை கொண்டு வருவதை விட பவுலரை கொண்டு வர வேண்டும் என்றே நினைத்தோம். ஏனெனில் பேட்ஸ்மேன் உள்ளே வந்து 10 முதல் 15 ரன்கள் அடிப்பதற்கு பதிலாக ஒரு பவுலர் வந்து இரண்டு முதல் மூன்று விக்கெட்டுகளை எடுத்தால் அது நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்று கருதியே சிமர்ஜீத் சிங்கை அணியில் சேர்த்தோம் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement