இதுக்கு பேட்டிங் வராமல் பெஞ்சிலேயே உட்காருங்க.. சிஎஸ்கே அவரை எடுக்கட்டும்.. தோனியை விமர்சித்த ஹர்பஜன்

Harbhajan Singh 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்தது. மே ஐந்தாம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற 53வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியது. அதனால் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறிய சென்னை பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை ரவீந்திர ஜடேஜா 43, கேப்டன் ருதுராஜ் 32 ரன்கள் எடுத்த உதவியுடன் 168 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. அதை சேசிங் செய்த பஞ்சாப் சுமாராக விளையாடி 20 ஓவரில் 139/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30, சசாங் சிங் 27 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ஹர்பஜன் விமர்சனம்:
முன்னதாக அந்தப் போட்டியில் எம்எஸ் தோனி தம்முடைய கேரியரிலேயே முதல் முறையாக 9வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். குறிப்பாக 42 வயதை கடந்து விட்டதால் முழங்கால் வலியை கொண்டுள்ள அவர் கடந்த வருடத்திலிருந்து கடைசி சில ஓவர்களில் ஓரிரு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் இப்போட்டியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஓவர்கள் மீதமிருந்த காரணத்தால் சான்ட்னர், தாக்கூர் ஆகியோர் அவுட்டான பின் 9வதாக தோனி களமிறங்கினார்.

அப்போது ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டான அவர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். இந்நிலையில் 9வது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக பேசாமல் தோனி பேட்டிங் செய்ய வராமலேயே இருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை 9வது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்பினால் தோனி விளையாடக் கூடாது”

- Advertisement -

“அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வது அணிக்கு நன்மையை கொடுக்கும். இப்போதும் முடிவை எடுக்கக்கூடிய அவர் முன்கூட்டியே பேட்டிங் செய்ய வராமல் தன்னுடைய அணியை தலை குனிய வைத்தார். அவருக்கு முன்பாக வந்த தாகூர் எப்போதும் தோனியை போல் ஷாட்டுகளை படித்ததில்லை. எனவே தோனியின் ஏன் இந்த தவறை செய்தார் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை”

இதையும் படிங்க: ருண் அதை செய்வதால் என்னோட வேலை ஈஸியாகுது.. தமிழக வீரரை பாராட்டிய சுனில் நரேன் பேட்டி

“அவருடைய அனுமதியின்றி சிஎஸ்கே அணியில் எதுவும் நடக்காது. எனவே தோனியை கீழே இறக்கும் முடிவை வேறு யாராவது எடுத்திருப்பார் என்று சொன்னால் அதை என்னால் ஏற்க முடியாது. கடைசி நேரத்தில் வேகமாக ரன்கள் தேவைப்பட்ட போது கடந்த போட்டிகளில் அசத்திய தோனி பஞ்சாப்புக்கு எதிரான இப்போட்டியில் பின்தங்கியது ஆச்சரியமாக இருந்தது. இன்று சிஎஸ்கே வென்றாலும் நான் தோனியை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அழைப்பேன். இதற்காக ரசிகர்கள் என்ன சொன்னாலும் நான் இதையே சொல்வேன்” என்று கூறினார்.

Advertisement