வருண் அதை செய்வதால் என்னோட வேலை ஈஸியாகுது.. தமிழக வீரரை பாராட்டிய சுனில் நரேன் பேட்டி

Sunil Narine 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 54வது லீக் போட்டியில் லக்னோவை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. லக்னோவில் மே ஐந்தாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 236 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 81, பில் சால்ட் 32 ரன்கள் எடுத்த நிலையில் லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஆனால் அதைத் தொடர்ந்து சேசிங் செய்த லக்னோ ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 16.1 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையும் சேர்த்து கொல்கத்தா 8வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

ஆட்டநாயகன் நரேன்:
அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. மறுபுறம் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்டு பேட்டிங்கில் சொதப்பு லக்னோ சொந்த மண்ணில் தோல்வியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு சரிந்தது. இந்த வெற்றிக்கு 81 ரன்கள் மற்றும் 4 ஓவரில் வெறும் 22 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய சுனில் நரேன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பேட்டிங்கில் கௌதம் கம்பீர் உள்ளிட்ட கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் ஆதரவு கொடுப்பதாக சுனில் நரேன் கூறியுள்ளார். மேலும் பந்து வீச்சில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி எதிர்புறம் விக்கெட்டுகளை எடுப்பது தம்முடைய வேலையை எளிதாக்குவதாக பாராட்டிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பேட்டிங்கில் நன்றாக துவங்குவது மிகவும் முக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“பயிற்சியாளர்கள் குழுவினர் எனக்கு ஆதரவு கொடுக்கின்றனர். அது எனக்கு வேலை செய்கிறது. எஞ்சிய தொடரிலும் அது எனக்கு வேலை செய்யும் என்று நம்புகிறேன். இவை அனைத்தும் போட்டி நாளன்று உங்களுடைய பலத்திற்கு தகுந்தார் போல் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது பொருத்ததாகும்”

இதையும் படிங்க: 168 ரன்களை வைத்தே பஞ்சாப் அணியை சுருட்டி வீசிய பிறகு வெற்றி குறித்து பேசிய – ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டி

“நீங்கள் கொஞ்சம் சாதுரியமாகவும் செயல்பட வேண்டும். சில நேரங்களில் அது வேலை செய்யும். சில நேரங்களில் வேலை செய்யாது. வருண் சக்கரவர்த்தியுடன் சேர்ந்து பந்து வீசுவது நன்றாக செல்கிறது. அவர் விக்கெட்டுகளை எடுப்பது என்னுடைய வேலையை எளிதாக்குகிறது. அவர் மிகவும் கடினமாக உழைக்கக் கூடியவர்” என்று கூறினார்.

Advertisement