முதல் ஓவர்லேயே தோற்கப் போறது தெரிஞ்சுடுச்சு.. அதையாச்சும் செஞ்சுருக்கலாம்ல.. ரிஷப் பண்ட்டை விமர்சித்த சேவாக்

Virender Sehwag Rishabh Pant
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்விகளை பதிவு செய்து தடுமாறி வருகிறது. குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் சுமாராக விளையாடிய டெல்லி 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 272 ரன்கள் குவித்து 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது.

அதிகபட்சமாக சுனில் நரேன் 85, ரகுவன்சி 54, ரசல் ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 273 ரன்களை சேசிங் செய்த டெல்லிக்கு ஆரம்பத்திலேயே டேவிட் வார்னர், பிரிதிவி ஷா, மிட்சேல் மார்ஷ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் மிடில் ஆர்டரில் கேப்டன் ரிசப் பண்ட் 55, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 54 ரன்கள் எடுத்து போராடியும் 166 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

சேவாக் விமர்சனம்:
இருப்பினும் அந்த போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடியாக 55 ரன்கள் குவித்தது டெல்லி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு அவர் 28 ரன்கள் விளாசி பழைய ஃபார்முக்கு வந்து விட்டேன் என்பதை காண்பித்தார்.

ஆனாலும் அந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடிய விதத்தை முன்னாள் கேப்டன் வீரேந்தர் சேவாக் விமர்சித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் பண்ட் இன்னிங்ஸ் நன்றாக இருந்தது. ஆனால் முதல் 2 போட்டிகளில் ரன்கள் அடிக்காத நீங்கள் இந்தப் போட்டியில் ரன்கள் அடித்த போதிலும் விக்கெட்டை பரிசளித்தீர்கள். நீங்கள் முடிந்தளவுக்கு கடைசி வரை அவுட்டாகாமல் சதமடித்து 110 அல்லது 120 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஏனெனில் ரன்கள் வேகமாக குறைந்தன”

- Advertisement -

“அவருடைய பேட்டிங் சிறப்பாக இருந்தது. மிகச் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவர் ஃபார்முக்கு வந்துள்ளார். ஆனால் இன்று நாம் வெற்றி பெறப் போவதில்லை என்பது முதல் ஓவரிலேயே நமக்கு தெரிந்து விட்டது. அது போன்ற சமயங்களில் நீங்கள் பயிற்சி செய்திருக்க வேண்டும். அதாவது வலைப்பயிற்சியில் விளையாடுவதற்கு பதிலாக இங்கே போட்டியில் நேரடியாக 20 பந்துகளை எக்ஸ்ட்ரா எதிர்கொண்டிருக்க வேண்டும்”

இதையும் படிங்க: 16 வருஷமா ஆர்.சி.பி அணி சந்தித்து வரும் பெயிலியருக்கு இதுதான் காரணம் – அம்பத்தி ராயுடு விமர்சனம்

“அதை செய்திருந்தால் அடுத்த போட்டியில் நீங்கள் வலைப்பயிற்சியை தவிர்த்து விட்டு நேரடியாக களமிறங்கலாம்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஆரம்பத்திலேயே வெற்றி பறிபோன அந்த போட்டியில் ரிசப் பண்ட் கடைசி வரை நின்று விளையாடிருந்தால் மோசமான தோல்வியை தவிர்த்து டெல்லியின் ரன்ரேட்டும் ஓரளவு காப்பாற்றப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement