காய்ச்சல் வேற.. மொத்தம் 5 பேர்.. எங்களால் பிளானை ஃபாலோ பண்ண முடியல.. சிஎஸ்கே தோல்வியால் பிளெமிங் கவலை

Stephen Fleming 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே ஒன்றாம் தேதி நடைபெற்ற 49வது லீக் போட்டியில் பஞ்சாப்பிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை தோல்வியை சந்தித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை தடுமாற்றமாக விளையாடி 163 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்கள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த பஞ்சாப் அணிக்கு ஜானி பேர்ஸ்டோ 46, ரிலீ ரோசவ் 43, கேப்டன் சாம் கரண் 26* ரன்கள் அடித்து 17.5 ஓவரில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 10 போட்டிகளில் ஐந்தாவது தோல்வியை பதிவு செய்த சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான பயணத்தில் பின்னடைவை சந்தித்தது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

கவலையில் கோச்:
இந்நிலையில் அந்தப் போட்டியில் துசார் தேஷ்பாண்டே காய்ச்சலால் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கும் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் இலங்கை வீரர்கள் பதிரனா, தீக்சனா ஆகியோர் விசா காரணமாக நாடு திரும்பியதாக கூறியுள்ளார். அத்துடன் தீபக் சஹர் 2 பந்தை வீசியதுடன் காயமடைந்து வெளியேறிய நிலையில் முஷ்தபிசுர் ரஹ்மான் இந்த போட்டியுடன் நாடு திரும்ப உள்ளதாகவும் பிளெமிங் கூறியுள்ளார்.

அப்படி பவுலிங் துறையில் 5 வீரர்கள் தொடர்ச்சியாக விளையாட தயாராக இல்லாததால் தங்களால் திட்டத்தை சரியாக பின்பற்ற முடியவில்லை என்று பிளெமிங் கவலை தெரிவித்துள்ளார். அது பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வியில் எதிரொலித்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தீபக் சஹர் நன்றாக தெரியவில்லை. எனவே அவருடைய நேர்மறையான ரிப்போர்ட்டுக்காக காத்திருக்கிறோம்”

- Advertisement -

“டாக்டர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அவரை சோதிப்பார்கள். இலங்கை வீரர்கள் விசாவுக்காக நாடு திரும்பியுள்ளனர். தரம்சாலாவின் நடைபெறும் அடுத்த போட்டியில் அவர்களை நாங்கள் பெறுவோம் என்று நம்புகிறேன். ரிச்சர்ட் கிலீசன் நேர்மறையான நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். துசார் தேஷ்பாண்டேவுக்கு காய்ச்சல். எனவே இன்றைய போட்டியில் வழக்கத்திற்கு மாறான சில மாற்றங்களை நாங்கள் செய்ய வேண்டியிருந்தது”

இதையும் படிங்க: இந்திய அணிக்கு பாண்டியாவை விட அவர் தான் துணை கேப்டனாக தகுதியானவர்.. இர்பான் பதான் கருத்து

“இருப்பினும் இது விளையாட்டின் ஒரு அங்கமாகும். ஆனால் அதன் காரணமாக எங்களுடைய வீரர்கள் போதுமான நேரத்தை பெற்று தங்களுடைய வேலையில் கச்சிதமாக செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. அதே காரணத்தால் போட்டியின் திட்டத்தைப் பின்பற்றி எங்களால் கச்சிதமாக செயல்பட முடியவில்லை” என்று கூறினார். அதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற கவலை சிஎஸ்கே ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement