இந்திய அணிக்கு பாண்டியாவை விட அவர் தான் துணை கேப்டனாக தகுதியானவர்.. இர்பான் பதான் கருத்து

Irfan Pathan 6
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது பல ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை முற்றிலும் புறக்கணித்துள்ள அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் அடிக்கடி காயத்தால் இந்தியாவுக்காக அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவதில்லை.

மேலும் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அவர் பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் அவருடைய தலைமையிலான மும்பை அணி 7 தோல்விகளை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறும் தருவாயில் தவித்து வருகிறது. எனவே பாண்டியாவை கழற்றி விடுமாறு சில முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்த நிலையில் தேர்வுக் குழு அவரை துணைக் கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இர்பான் பதான் அதிருப்தி:
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா தான் இந்தியாவுக்கு சரியான துணை கேப்டன் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதற்கு முன் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். ரோகித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் படி பாண்டியா மற்றும் சூரியகுமார் ஆகியோர் தலைமையில் இளம் அணியை உருவாக்கும் வேலைகள் நடைபெற்றது”

“இருப்பினும் சுமாரான செயல்பாடுகள் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு தொடர்ச்சியாக விளையாடாததால் பாண்டியா மீது கேள்விகள் எழுந்தன. காயங்கள் தவிர்க்க முடியாதது. ஆனால் இந்திய அணிக்கு நீங்கள் திரும்புவதற்கு தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் பங்கு பெறுவது முக்கியம். ஆனால் ஹர்திக் பாண்டியா மட்டும் காயத்திலிருந்து குணமடைந்ததும் நேரடியாக இந்திய அணிக்குள் வருகிறார்”

- Advertisement -

“இவ்வாறு நடக்கக் கூடாது. ஏனெனில் அது இதர வீரர்களுக்கு தவறான செய்தியை கொடுக்கும். உலகக்கோப்பை போன்ற தொடரில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு வீரரும் நியாயத்துடன் சமமாக நடத்தப்பட வேண்டும். ஒருவர் ஸ்பெஷலாக நடத்தப்படும் போது அது அணியின் சூழ்நிலையை பாதிக்கிறது. கிரிக்கெட் என்பது டென்னிஸ் போன்ற விளையாட்டு கிடையாது”

இதையும் படிங்க: தோனியை பாருங்க.. ஒரு டீம் வெற்றிகரமா செயல்பட சிஎஸ்கே அணுகுமுறை பொருந்தும்.. கம்பீர் பாராட்டு

“எனவே அங்கே ரோகித் அல்லது விராட் அல்லது புதுமுக வீரர் ஆகிய அனைவரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக தொடர்ச்சியாக செயல்படுவதற்கு ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் அந்த இடத்திற்கு ஜஸ்பிரித் பும்ரா போன்றவர் மோசமான தேர்வாக இருக்க மாட்டார்” என்று கூறினார்.

Advertisement