16 வருஷமா ஆர்.சி.பி அணி சந்தித்து வரும் பெயிலியருக்கு இதுதான் காரணம் – அம்பத்தி ராயுடு விமர்சனம்

Rayudu
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் நடப்பு 17-வது சீசனானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் தாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அதேபோன்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளது.

- Advertisement -

ஆனால் வருடா வருடம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 4 போட்டிகளில் மூன்று தோல்வி மற்றும் ஒரு வெற்றியுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 182 ரன்களை சேசிங் செய்து விளையாடிய பெங்களூர் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந்நிலையில் பெங்களூரு அணியின் தொடர்ச்சியான பெயிலியர் குறித்து பேசிய முன்னாள் சி.எஸ்.கே வீரரான அம்பத்தி ராயுடு கூறுகையில் :

- Advertisement -

ஆர்.சி.பி அணியில் பந்துவீச்சாளர்கள் எப்பொழுதுமே குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக ரன்களை வழங்குகிறார்கள். அதேபோன்று நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருந்தும் தங்களது திறனை விட குறைவான ரன்களையே அவர்கள் அடிக்கிறார்கள். அதோடு அழுத்தமான நேரங்களில் அந்த அணியில் யார் பேட்டிங் செய்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஆர்.சி.பி அணியில் சர்வதேச வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் தான் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஐபிஎல் மட்டும் இப்படி நடந்தா.. தோனியை விட கோலி அதிக கோப்பை ஜெயிச்சுருப்பாரு.. ரவி சாஸ்திரி

இளம் வீரர்கள் தான் களமிறங்கி விளையாடுகின்றனர். ஒரு சில ஆட்டங்களில் தினேஷ் கார்த்திக்கினால் போட்டி வெற்றி பெறுகிறது. அதை தவிர அணியில் இருக்கும் மற்ற நட்சத்திர வீரர்கள் தங்களது பங்களிப்பை வழங்குவதில்லை. இப்படி அந்த அணியில் டாப் ஆர்டர் நட்சத்திர வீரர்கள் யாரும் சிறப்பாக செயல்படாததாலே ஆர்சிபி அணி இவ்வளவு பெரிய சரிவை சந்தித்துள்ளது என அம்பத்தி ராயுடு கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement