ஐபிஎல் மட்டும் இப்படி நடந்தா.. தோனியை விட கோலி அதிக கோப்பை ஜெயிச்சுருப்பாரு.. ரவி சாஸ்திரி

Ravi Shastri 3
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 20204 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வழக்கம் போல தடுமாறி வருகிறது. 2008 முதல் அனில் கும்ப்ளே, விராட் கோலி போன்ற மகத்தான வீரர்கள் தலைமையில் 2009, 2011, 2016 சீசன்களில் ஃபைனல் வரை சென்று தோல்வியை சந்தித்த அந்த அணிக்கு இம்முறை பஃப் டு பிளேஸிஸ் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

ஆனால் அவருடைய தலைமையில் கடந்த வருடத்தை போலவே இம்முறையும் தடுமாறும் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்வியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் தவிக்கிறது. அந்த அணிக்கு வழக்கம் போல இந்த வருடமும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இதுவரை களமிறங்கிய 4 போட்டிகளில் 203* ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடி வருகிறார்.

- Advertisement -

ரவி சாஸ்திரி ஆதங்கம்:
ஆனால் அதை அப்படியே பந்து வீச்சில் வள்ளலாக வாரி வழங்கும் ஆர்சிபி பவுலர்கள் வெற்றியை எதிரணிக்கு பரிசளித்து வருகின்றனர். அதன் காரணமாக விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை வெல்லும் அளவுக்கு அபாரமாக விளையாடியும் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் பாதாளத்தில் தவிக்கிறது. அதனால் இது போன்ற பவுலிங்கை வைத்துக்கொண்டு பெங்களூரு அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்ற விமர்சனங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் மட்டும் தனிநபர் விளையாட்டாக இருந்தால் இந்நேரம் எம்எஸ் தோனி, ரோகித் சர்மா போன்றவர்களை மிஞ்சி விராட் கோலி அதிக கோப்பைகளை வென்றிருப்பார் என்று ரவி சாஸ்திரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் அந்தளவுக்கு விராட் கோலி சிறப்பாக செயல்பட்டும் மற்ற வீரர்கள் சொதப்புவதால் பெங்களூரு அணி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலையில் அவர் கூறியது பின்வருமாறு. “ஒருவேளை ஐபிஎல் தொடர் தனிநபர் விளையாட்டாக இருந்தால் விராட் கோலி அதிக கோப்பைகளை வென்றிருப்பார்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2008 முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 7 சதங்கள் உட்பட 7466* ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்த பையனுக்கு 2024 டி20 உ.கோ டிக்கெட்டை.. புக் பண்ணுங்க அஜித் அகர்கர்.. மைக்கேல் வாகன் கோரிக்கை

அதனால் அதிக சதங்கள் மற்றும் ரன்கள் அடித்த வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார். எனவே ஒருவேளை டென்னிஸ் போல ஐபிஎல் டி20 தொடர் தனிநபர் விளையாட்டாக இருந்திருந்தால் ரோஜா பெடரர், ரபேல் நாடார் போன்ற வீரர்களைப் போல் விராட் கோலியும் நிறைய கோப்பைகளை வென்றிருப்பார் என்று சொன்னால் மிகையாகாது.

Advertisement