நல்லா உத்து பாருங்கய்யா.. அநீதியான தீர்ப்பை வழங்கிய அம்பயர்.. கொதித்த சங்கக்காரா.. அடுத்த பந்தில் ட்விஸ்ட்

Kumar Sangakkara
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே இரண்டாம் தேதி நடைபெற்ற 50வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் 201/3 ரன்கள் எடுத்தது.

அதைத் தொடர்ந்து 202 ரன்களை சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் ஜெய்ஸ்வால் 67, ரியான் பராக் 77 ரன்கள் எடுத்ததால் ராஜஸ்தான் உறுதியாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் துருவ் ஜுரேல் 1, ஹெட்மயர் 13, போவல் 27 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்னில் அவுட்டாக்கி ஃபினிஷிங் செய்ய விடாமல் ராஜஸ்தானை 20 ஓவரில் 200/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஹைதராபாத் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

கொதித்த சங்கக்காரா:
அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக இந்தப் போட்டியில் 35/2 என தடுமாறிய ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அப்போது ஆவேஷ் கான் வீசிய 15வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட அவர் அடிக்காமல் தவற விட்டார். அது நேராக விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கையில் சென்றடைந்தது.

அப்போது ஹெட் வெள்ளைக்கோட்டுக்கு வெளியே இருப்பதை கவனித்த சஞ்சு சாம்சன் பந்தை வேகமாக ஸ்டம்ப் மீது எறிந்து ரன் அவுட் செய்ய முயற்சித்தார். மறுபுறம் தரையில் தேய்த்துக் கொண்டே வெள்ளைக்கோட்டை தொட முயற்சிக்காத டிராவிஸ் ஹெட் நடந்து சென்ற வாக்கில் பேட்டை வெள்ளைக்கோட்டில் வைத்தார். அதற்குள் சஞ்சு சாம்சன் வீசிய பந்து ஸ்டம்பில் அடித்ததால் ராஜஸ்தான் அணியினர் ரன் அவுட் கேட்டனர்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து 3வது இவர் சோதித்தார். அதில் ஸ்டம்ப் மீது பந்து பட்டு மின்விளக்குகள் எரிந்த போது டிராவிஸ் ஹெட் பேட் காற்றில் இருந்ததால் அவுட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய பேட் தரையில் இருந்ததாக மைக்கில் சொன்ன 3வது நடுவர் பெரிய திரையில் “டிராவிஸ் ஹெட் நாட் அவுட்” என்று அறிவித்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ராஜஸ்தான் அணியினரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: 134 ரன்ஸ் மெகா பார்ட்னர்ஷிப்.. மிரட்டிய புவி.. ராஜஸ்தான் வெற்றியை கடைசி பந்தில் ஹைதராபாத் பறித்தது எப்படி?

இருப்பினும் டிராவிஸ் ஹெட் நடந்த வாக்கில் சென்று பேட்டை வைத்ததால் அடுத்த ஃபிரேமில் பந்து ஸ்டம்பில் படும் போது பேட் தரையில் இருந்ததாக கருதிய 3வது நடுவர் நாட் அவுட் என்று அறிவித்தார். அதனால் கொதித்த ராஜஸ்தான் அணியின் இயக்குனர் குமார் சங்ககாரா “நல்லா பாருங்க” என்ற வகையில் 4வது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டாலும் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்த பந்திலேயே டிராவிஸ் ஹெட்டை கிளீன் போல்டாக்கிய ஆவேஷ் கான் சேதாரம் செய்ய விடாமல் பெவிலியன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement