134 ரன்ஸ் மெகா பார்ட்னர்ஷிப்.. மிரட்டிய புவி.. ராஜஸ்தான் வெற்றியை கடைசி பந்தில் ஹைதராபாத் பறித்தது எப்படி?

SRH vs RR 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே இரண்டாம் தேதி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் 50வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 12, அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 35/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக வந்த நிதிஷ் ரெட்டியுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 3வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹைதராபாத்தை மீட்டெடுத்த இந்த ஜோடியில் டிராவிஸ் ஹெட் 58 (43) ரன்கள் குவித்து ஆட்டழந்தார். அடுத்ததாக வந்த ஹென்றிச் க்ளாஸென் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 42* (19) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.

- Advertisement -

த்ரில் வெற்றி:
மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய நித்திஷ் ரெட்டி 3 பவுண்டரி 8 சிக்சருடன் 76* (42) ரன்கள் குவித்தார். அதனால் 20 ஓவரில் ஹைதராபாத் 201/3 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 202 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அடுத்ததாக வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் நட்சத்திர வீரர் புவனேஸ்வர் குமார் வேகத்தில் டல் அவுட்டானார். அதனால் 1/2 என திண்டாடிய ராஜஸ்தான் அணிக்கு மறுபுறம் அசத்தலாக விளையாடிய ஜெய்ஸ்வால் ரன் குவிப்பின் ஈடுபட்டார். அவருடன் அடுத்ததாக வந்த ரியான் பராக் ஜோடி சேர்ந்து ஹைதராபாத் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டார். அந்த வகையில் நேரம் செல்ல செல்ல ஹைதராபாத்துக்கு சவால் கொடுத்த இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 134 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் போட்டு ராஜஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது.

- Advertisement -

அதில் அரை சதமடித்த ஜெய்ஸ்வால் 67 (40) ரன்களில் நடராஜன் வேகத்தில் போல்டானார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அரை சதமடித்த ரியான் பராக் 77 (49) ரன்களில் அவுட்டாகி சென்றார். அப்போது வந்து அதிரடி காட்ட முயற்சித்த ஹெட்மயர் 13 (9) ரன்களில் நடராஜன் வேகத்தில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த துருவ் ஜுரேல் 1 (3) ரன்னில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் மறுபுறம் ரோவ்மன் போவல் அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய ராஜஸ்தானுக்கு புவனேஸ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அதில் முதல் 5 பந்தில் 11 ரன்களை கொடுத்த புவனேஸ்வர் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது போவலை 27 (15) ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற ஐதராபாத் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 3, நடராஜன் 2, கேப்டன் கமின்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையும் படிங்க: 201 ரன்ஸ்.. சேசிங் தான் கஷ்டம்.. முதல் பேட்டிங்கில் மாஸ் காட்டிய ஹைதராபாத்.. சஹால் மோசமான சாதனை

இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 1 ரன் வித்தியாசத்தில் சாதனையை வெற்றியை ஹைதராபாத் பதிவு செய்தது. அதனால் புள்ளி பட்டியலில் 10 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத் அணி சென்னையை பின்னுக்கு தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியது.

Advertisement