இந்த பையனுக்கு 2024 டி20 உ.கோ டிக்கெட்டை.. புக் பண்ணுங்க அஜித் அகர்கர்.. மைக்கேல் வாகன் கோரிக்கை

Micheal Vaughan
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் அசத்தும் வீரர்கள் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த சூழ்நிலையில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவதற்கு ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோரிடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து டெல்லி அணிக்காக விளையாடும் ரிசப் பண்ட் அபாரமாக விளையாடுவதால் ஜிதேஷ் சர்மா, சஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

புக் பண்ணுங்க:
ஏனெனில் சஞ்சு சாம்சன் அழுத்தமான சூழ்நிலைகளில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் அடிப்பதில்லை. ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடினாலும் இதுவரை பெரிய ரன்கள் குவித்து தரத்தை நிரூபிக்கவில்லை. மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடும் ரிஷப் பண்ட் சென்னைக்கு எதிராக 51 (32) ரன்கள் அடித்து அசத்தினார்.

அதை விட கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வெங்கடேஷ் ஐயர் வீசிய ஒரே ஓவரில் 4, 6, 6, 4, 4, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் 28 ரன்கள் விளாசி மொத்தம் 55 (25) ரன்கள் குவித்து பழைய ஃபார்முக்கு வந்துள்ளார். எனவே 2024 டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அஜித் அகர்கருக்கு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மோசமான சூழ்நிலையை கடந்து வந்த அவர் தற்போது இப்படி விளையாடுவதை பார்ப்பது அபாரமாக இருக்கிறது. ரன்கள் எடுப்பதற்காக அவர் நன்றாக ஓடுகிறார் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனால் பந்தை அவர் அடிக்கும் விதம் டெல்லி அணிக்கும் இந்திய அணிக்கும் நல்ல அறிகுறியாகும். அவர் கிரிக்கெட்டை விளையாடுவதற்கு இயற்கையாக பரிசளிக்கப்பட்ட வீரர். மிட்சேல் ஸ்டார்க் வீசிய முதல் பந்தையே அவர் பிளிக் ஷாட்டை அடித்து சிக்ஸராக பறக்க விட்டார்”

இதையும் படிங்க: முதல் 2 போட்டிகளில் 100 ரன்ஸ் கொடுக்க அதான் காரணம்.. 3வது துண்டு தவறாமல் ஃபார்முக்கு வந்த ஸ்டார்க் பேட்டி

“டெல்லி சுமாராக விளையாடினாலும் இடைவெளி இருக்கும் இடத்தில் பவுண்டரி அடிக்கும் அவர் பொறுப்புடன் செயல்படுகிறார். எனவே இப்படி அவர் விளையாடுவது இந்திய அணிக்கு சிறப்பானதாகும். 3 – 4 வயதிலிருந்து நீங்கள் கிரிக்கெட்டை விளையாடினால் ஒன்றரை வருடம் விளையாடாமல் போனது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே நாம் உலகக்கோப்பை விமானத்தில் அவர் இருப்பதை பற்றி பேசுகிறோம். ஒருவேளை அவருக்கு விமான டிக்கெட், பாஸ் மற்றும் ஹோட்டல் அறைகளை இதுவரை புக் செய்யாமல் இருந்தால் அஜித் அகர்கர் இப்போதே செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement