குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டால் விராட் கோலிக்கு கடைசி வாய்ப்பா? கேஎல் ராகுல் நீக்கப்பட்டது ஏன்? அகர்கர் பதில்

Ajit Agarkar 4
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் நடராஜன் போன்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் கூட தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டுமே இடம் பெற்றதற்கு பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் அந்த அணியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது. ஏனெனில் கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் நங்கூரமாக விளையாடும் ஸ்டைலை கொண்ட அவரை தேர்வுக் குழு கழற்றிவிட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வலம் வந்தன. போதாக்குறைக்கு ஐபிஎல் 2024 தொடரில் பெங்களூரு அணிக்காக சில போட்டிகளில் விராட் கோலி குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார்.

- Advertisement -

குறைவான ஸ்ட்ரைக் ரேட்:
எனவே சுயநலத்துடன் விளையாடும் அவரை உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற விமர்சனங்கள் காணப்பட்டது. இருப்பினும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள விராட் கோலியின் அனுபவத்திற்கு மதிப்பளித்து கடைசி முறையாக தேர்வுக் குழு வாய்ப்பு கொடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி நாங்கள் எப்போதும் விமர்சித்ததில்லை என்ற தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

மேலும் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர் தேவைப்பட்டதால் டாப் ஆர்டரில் விளையாடும் கேஎல் ராகுலை தேர்வு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி நாங்கள் எதையும் விவாதிக்கவில்லை. அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால் எந்த கவலையும் இல்லை. அங்கே இடைவேளை இருப்பதால் எப்போதும் நீங்கள் உலகக் கோப்பைக்கு செல்வீர்கள்”

- Advertisement -

“அங்கே தான் உங்களுக்கு அனுபவம் நிறைய தேவைப்படும். ஒருவேளை உலகக் கோப்பை தொடரிலும் ஐபிஎல் போல 220 ரன்கள் அடிக்கப்படும் பிட்ச் இருந்தால் அதில் அசத்துவதற்கு தேவையான திறமை எங்களிடம் இருக்கிறது. உலகக் கோப்பையில் விளையாடும் போது உங்களுக்கு எப்போதுமே அழுத்தம் வித்தியாசமானதாக இருக்கும். கேஎல் ராகுல் சிறப்பான வீரர் என்பதை நாம் அறிவோம்”

இதையும் படிங்க: தோனி இருக்கும்போது 19-வது ஓவரை ராகுல் சாஹருக்கு கொடுக்க காரணம் இதுதான். வெற்றிக்கு பிறகு – சாம் கரண் பேட்டி

“இருப்பினும் நாங்கள் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய வீரர்களை பார்த்தோம். ஆனால் கேஎல் ராகுல் டாப் ஆர்டரில் விளையாடுகிறார். எனவே சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் அசத்தக்கூடிய திறமையை கொண்டிருப்பதாக நாங்கள் கருதினோம். ரிஷப் பண்ட் 5வது இடத்தில் விளையாடக் கூடியவர். அந்த இருவரும் நல்ல வீரர்கள்” என்று கூறினார்.

Advertisement