தோனி இருக்கும்போது 19-வது ஓவரை ராகுல் சாஹருக்கு கொடுக்க காரணம் இதுதான். வெற்றிக்கு பிறகு – சாம் கரண் பேட்டி

Curran
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியில் விளையாடிய பஞ்சாப் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களையும், ரஹானே 29 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பஞ்சாப் அணி சார்பாக ராகுல் சாகர் மற்றும் ஹர்ப்ரீத் பிரார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பேர்ஸ்டோ 46 ரன்களையும், ரூஸோ 43 ரன்களையும் குவித்து அசத்தினர்.’

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை வந்து வெற்றி பெறுவதில் மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் சொந்த மண்ணில் விளையாடுவதை விட வெளி மண்ணில் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகளை பெற்று வருகிறோம்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளதில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடுத்தடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். இந்த போட்டியில் டியூ வந்ததால் எங்களுக்கு அதிக சாதகம் ஏற்பட்டது. அதேபோன்று பந்து வீச்சில் ரபாடா மிகச்சிறப்பாக பவர்பிள் ஓவர்களின் போது பந்து வீசினார். மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக வந்து வீசினர்.

இதையும் படிங்க : அவர் மேல எந்த தப்பும் இல்ல ஆனால்.. 2024 டி20 உ.கோ அணியில் ரிங்கு சிங் கழற்றி விடப்பட்டது ஏன்? அகர்கர் பதில்

குறிப்பாக ராகுல் சாகர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் பந்து வீசுவதாலேயே அவரை தோனிக்கு எதிராக 19-வது ஓவரை வீச வைத்தேன். அவர் அதனை சரியாக பயன்படுத்தி அந்த ஓவரை அற்புதமாக வீசினார். அதேபோன்று பேட்டிங் துறையிலும் தற்போது எங்களது அணியின் வீரர்கள் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலே இந்த போட்டியில் வெற்றி பெற முடிந்ததாக சாம் கரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement