முதல் 2 போட்டிகளில் 100 ரன்ஸ் கொடுக்க அதான் காரணம்.. 3வது துண்டு தவறாமல் ஃபார்முக்கு வந்த ஸ்டார்க் பேட்டி

Mitchell Starc 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய அந்த அணி இம்முறை ஸ்ரேயாஸ் ஐயர் – கெளதம் கம்பீர் தலைமையில் எதிரணிகளை மிரட்டி வருகிறது. குறிப்பாக டெல்லிக்கு எதிராக நடந்த 3வது போட்டியில் 272 ரன்கள் அடித்து நொறுக்கிய கொல்கத்தா 2வது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் பதிவு செய்த சாதனை படைத்தது.

அதிகபட்சமாக சுனில் நரேன் 85, ரகுவன்சி 54, ரசல் 41, ரிங்கு சிங் 26 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதை சேசிங் செய்த டெல்லிக்கு ரிஷப் பண்ட் 55, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 54 ரன்கள் எடுத்துப் போராடியும் இதர வீரர்கள் கை கொடுக்க தவறினார்கள். அதனால் 166 ரன்களுக்கு டெல்லியை ஆல் அவுட்டாக்கி வெற்றி கண்ட கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வைபவ் அரோகரா 3 வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

திரும்பி வந்த ஸ்டார்க்:
முன்னதாக இந்த வருடம் கொல்கத்தா அணிக்காக 24.75 என்ற வரலாறு காணாத தொகைக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் முதல் 2 போட்டிகளில் மொத்தம் 100 ரன்கள் வாரி வழங்கி 1 விக்கெட் கூட எடுக்காமல் தடுமாறினார். குறிப்பாக முதல் போட்டியிலேயே 53 ரன்களை வாரி வழங்கிய அவர் தன்னுடைய ஐபிஎல் கேரியரில் மோசமான பந்து வீச்சை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்தார்.

அதனால் கிண்டல்களுக்கு உள்ளான அவர் இப்போட்டியில் டேவிட் வார்னர், மிட்சேல் மார்ஷ் ஆகிய 2 ஆஸ்திரேலிய வீரர்களை அவுட்டாக்கி 3 ஓவரில் 25 ரன்கள் மட்டும் கொடுத்தார். அந்த வகையில் 2 முக்கிய விக்கெட்டுகள் எடுத்த மிட்சேல் ஸ்டார்க் ஃபார்முக்கு திரும்பி இப்போட்டியின் வெற்றியில் பங்காற்றி கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்து தனது தரத்தை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் முதலிரண்டு போட்டிகளில் அதிர்ஷ்டம் கை கொடுக்காததால் தடுமாறியதாக தெரிவிக்கும் ஸ்டார்க் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எதையும் அதிகம் மாற்றவில்லை. டி20 கிரிக்கெட்டில் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. அது எப்போதும் உங்களிடம் வேகமாக வரும். ஆனால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்திய நாங்கள் 3 – 0 வெற்றிகளை பெற்றுள்ளோம். அது தான் முக்கியம்”

இதையும் படிங்க: ஒன்னா.. ரெண்டா.. சொல்றதுக்கு அவ்ளோ தப்பு இருக்கு.. கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – பாண்டிங் புலம்பல்

“போட்டி துவங்குவதற்கு முன்பாக எதையும் அதிகம் பேசவில்லை. அங்கேயும் இங்கேயும் கொஞ்சம் அதிர்ஷ்டத்தை எடுத்துக் கொண்டோம். வார்னர், மார்ஷ் ஆகியோரை பாக்கெட்டில் போட்டது நன்றாக இருந்தது. ஆனால் அதை விட வெற்றி பெற்றது பெரிதாக அமைந்தது. வைபவ் அரோரா இன்று சிறப்பாக பந்து வீசினார். போட்டியை பற்றி நாங்கள் எப்போதும் வலைப் பயிற்சியில் அதிகமாக விவாதிப்போம்” என்று கூறினார்.

Advertisement