லக்னோவிடம் 27/4 என திணறிய மும்பை.. 2009 முதல் பிறந்தநாளில் ஓடாத ஹிட்மேன் ரோஹித் வண்டி.. பரிதாபமான ரெக்கார்ட்

Rohit Sharma 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் 48வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ரோஹித் சர்மா 4 (5) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அப்போது வந்த சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாட முயற்சித்து 10 ரன்னில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த திலக் வர்மா 7 ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். போதாகுறைக்கு அடுத்ததாக வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா கோல்டன் டக் அவுட்டானதால் 27/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய மும்பை 100 ரன்கள் தாண்டுமா என்று அந்த அணி ரசிகர்கள் கவலையடைந்தனர்.

- Advertisement -

பிறந்தநாளில் சொதப்பல்:
அப்போது மறுபுறம் நிதானமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் இஷான் கிஸானுடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த நேஹல் வதேரா நங்கூரமாக விளையாடினார். அந்த வகையில் 14 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடி சரிவை சரி செய்த இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போது இசான் கிசான் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல மறுபுறம் விளையாடிய நேஹல் வதேரா அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 (41) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

இறுதியில் டிம் டேவிட் 35* (18) ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய மும்பை 20 ஓவரில் 144/7 ரன்கள் எடுத்த நிலையில் லக்னோ சார்பில் அதிகபட்சமாக மோசின் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர சீனியர் வீரர் ரோகித் சர்மா தம்முடைய 37வது பிறந்த நாளை கொண்டாடினார். மும்பைக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இருப்பினும் இன்று பிறந்தநாளில் ரோகித் சர்மா அடித்து நொறுக்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் 5 பந்துகளில் 4 ரன்களில் அவுட்டான அவர் ரசிகர்களுக்கும் மும்பை அணிக்கும் ஏமாற்றத்தை கொடுத்தார். இது போக ஐபிஎல் தொடரில் தம்முடைய பிறந்த நாட்களில் ரோகித் சர்மா முறையே 2009இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 17, 2014இல் ஹைதராபாத்துக்கு எதிராக 1 (5), 2022இல் ராஜஸ்தானுக்கு எதிராக 2 (5), 2023இல் ராஜஸ்தானுக்கு எதிராக 3 (5), 2024*இல் லக்னோவுக்கு எதிராக 4 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: சொல்பேச்சையும் கேக்கல.. ஐ.பி.எல்-லையும் சரியா ஆடல.. இந்திய அணியில் இருந்து 2 வீரர்களை நீக்கிய பி.சி.சி.ஐ

குறிப்பாக தம்முடைய பிறந்த நாட்களில் விளையாடிய கடைசி 4 ஐபிஎல் போட்டிகளில் 1 (5), 2 (5), 3 (5), 4 (5) என்பதே ரோகித் சர்மாவின் ஸ்கோராகும். இதை பார்க்கும் ரசிகர்கள் பிறந்த நாட்களில் ரோகித் சர்மாவின் வண்டி ஓடாது போல என்று சமூக வலைதளங்களில் கலகலப்பை தெரிவிக்கின்றனர்.

Advertisement