சொல்பேச்சையும் கேக்கல.. ஐ.பி.எல்-லையும் சரியா ஆடல.. இந்திய அணியில் இருந்து 2 வீரர்களை நீக்கிய பி.சி.சி.ஐ

Shreyas
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் ஜூன் மாதம் 2-ஆம் தேதி துவங்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூன் 29-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடருக்காக 20 அணிகள் பங்கேற்க இருப்பதினால் இந்த தொடரில் இறுதிவரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

இந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற இருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் அணியை அறிவிக்க மே 1-ஆம் தேதி வரை மட்டுமே ஐசிசி கெடு விதித்திருந்தது.

- Advertisement -

அதனால் தற்போது ஒவ்வொரு நாடுகளும் தங்களது டி20 உலக கோப்பை அணியை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் நிர்வாகமான பிசிசிஐ-யும் இந்த டி20 உலககோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது.

அதில் இளம் வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படாதது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச தொடர் முடிந்த பிறகு உள்ளூர் போட்டிகளான ரஞ்சி தொடரில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டது.

- Advertisement -

ஆனாலும் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ரஞ்சி கோப்பையில் விளையாடாதது பிசிசிஐ மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்திய அணியின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதோடு சேர்த்து தற்போது டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் அவர்கள் நீக்கப்பட்டுள்னர்.

இதையும் படிங்க : பாண்டியாவை விட நல்ல ஃபினிஷர்.. ரிங்குவை ஏன் செலக்ட் பண்ணல.. புள்ளிவிவரத்துடன் ரசிகர்கள் விளாசல்

கூடுதலாக ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள பட்சத்தில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எது எப்படி இருப்பினும் இந்திய அணி இந்த டி20 உலக கோப்பையையை கைப்பற்றி ரோகித் சர்மாவின் தலைமையில் சாம்பியன் ஆகவேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement