ஒன்னா.. ரெண்டா.. சொல்றதுக்கு அவ்ளோ தப்பு இருக்கு.. கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – பாண்டிங் புலம்பல்

Ponting
- Advertisement -

கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது மூன்றாவது தோல்வியை பதிவு செய்துள்ளது. பலம்வாய்ந்த சென்னை அணியை வீழ்த்திய டெல்லி மற்ற அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது.

அதோடு ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு கேப்டனாக விரும்பியிருந்த வேளையில் பலமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட டெல்லி அணியானது இப்படி தொடரின் துவக்கத்திலேயே சரிவை சந்தித்துள்ளது அணி நிர்வாகத்தின் இடையேயும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பந்துவீசிய டெல்லி அணியானது பந்துவீச்சில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி 272 ரன்கள் வாரி இறைத்ததோடு பேட்டிங்கிலும் 20 ஓவர்களை பூர்த்தி செய்யாமல் 17.2 ஓவர்களிலேயே 166 ரன்களுக்கு ஆல் அவுட் டானது. இப்படி டெல்லி அணியின் மோசமான ஆட்டம் அந்த அணியின் நிர்வாகத்தையும் வருத்தம் அடையச் செய்துள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் இந்த போட்டியில் தங்களது அணி வீரர்கள் விளையாடிய விதத்தில் செய்த பல்வேறு விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிப்படையாக தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைய நிலையில் எங்களது வீரர்களை மதிப்பிடுவது என்பது மிகவும் கடினம்.

- Advertisement -

இந்த ஆட்டத்தின் முதல் பாதியின் போது நான் மிகவும் சங்கடத்திற்கு உள்ளானேன். ஏனெனில் எங்களது அணியின் பவுலர்கள் ஏகப்பட்ட ரன்களை வாரி வழங்கி விட்டனர். அதோடு நாங்கள் 17 ஓவர்களை வீசியபோதே இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டதால் கடைசி இரண்டு ஓவர்களில் வெளிவட்டத்தில் நான்கு வீரர்களுடன் பீல்டிங் செய்ய வேண்டியிருந்தது. அதேபோன்று பேட்டிங்கிலும் பெரிய சறுக்களையும், ஏகப்பட்ட பின்னடைவையும் சந்தித்திருக்கிறோம்.

இதையும் படிங்க: வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா ஒரு ஓவர் கூட வீசாதது ஏன்? – கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கொடுத்த விளக்கம்

இப்படி இந்த தோல்வி குறித்து பேச ஏராளமான விடயங்கள் இந்த ஒரே போட்டியில் நடைபெற்று விட்டன. அவைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. பல்வேறு விஷயங்கள் குறித்து அணி மீட்டிங்கில் பேச இருக்கிறோம். இதனை உடனடியாக சரி செய்து முன்னோக்கி செல்ல வேண்டும். அதனால் வெளிப்படையான ஆலோசனை வீரர்கள் அறையில் நடக்க இருப்பது உறுதி என ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement