அடுத்த ஐ.பி.எல் சீசனில் தமிழகத்தை சேர்ந்த அனுபவ வீரர் விற்கப்படாமல் போக கூட வாய்ப்பிருக்கு – சேவாக் வெளிப்படை

Sehwag
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் பாதி ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிவடைந்த வேளையில் இந்த தொடருக்கான புள்ளி பட்டியல் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஒன்பது ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே தங்களது அணியை பலப்படுத்தி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கை மேல் பலனாக இந்த ஆண்டு அந்த அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு தரப்பிலும் இருந்தும் மிகச் சிறப்பான செயல்பாடு வெளிப்பட்டு வருவதால் பெரிய பெரிய அணிகளை கூட ராஜஸ்தான் அணி பந்தாடி வருகிறது.

- Advertisement -

ஆனாலும் ராஜஸ்தான அணியில் ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி வரும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி சற்று சுமாரான பந்துவீச்சையே வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஓவரில் ரன்கள் குறிப்பிட்ட அளவைவிட இம்முறை அதிகமாக சென்று வருகிறது.

ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுக்கும் அவர் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தவிப்பதால் அவரது இடம் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் அஸ்வினின் பந்துவீச்சு குறித்து கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

கடந்த 2017-ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி தொடருக்கு பின்னர் அவர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஏனெனில் மிடில் ஓவர்களில் எதிரணியின் விக்கெட்டுகளை அவரால் வீழ்த்த முடிவதில்லை. ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் அவர் விக்கெட் டேக்கிங் டெலிவரிகளை தவிர்த்து வருகிறார். டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பந்து வீசினால் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் ஏற்படும்.

இதையும் படிங்க : 20008இல் அந்த ஐபிஎல் அணிக்கு நான் வெறித்தனமான சிஎஸ்கே ரசிகன்.. இப்போவும் பிடிக்கும்.. குல்தீப் பேட்டி

ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் அஸ்வின் பந்து வீசுவதில்லை. எனவே என்னை பொறுத்தவரை இனிவரும் போட்டிகளில் நான் அவரை சேர்க்க மாட்டேன். சொல்லப் போனால் அடுத்த சீசனுக்கு அவர் ஏலத்தில் விற்கப்படாமல் கூட போகலாம் என்று தோன்றுவதாக சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement