ஐ.பி.எல் விளாயாண்டது போதும் கெளம்பி வாங்க.. இங்கி வீரர்களுக்கு அழைப்பு விடுத்த நிர்வாகம் – என்ன நடந்தது?

ENG
- Advertisement -

கடந்த மாதம் இந்தியாவில் துவங்கிய 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. வழக்கத்தை விட இந்த தொடரில் ஒவ்வொரு அணியுமே வெற்றிக்காக கடுமையான போராட்டத்தை அளித்து வருவதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது அதிக அளவு சுவாரசியத்தை கூட்டியுள்ளது.

கிட்டத்தட்ட பாதி லீக் போட்டிகள் முடிவடைந்த வேளையில் பிளே ஆப் சுற்றினை நோக்கி இந்த தொடரானது நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தொடருக்கான ப்ளே ஆப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் செல்லும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வரும் வேளையில் அடுத்ததாக டி20 உலக கோப்பையையும் நெருங்கி வந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் பிளே ஆப் சுற்று போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை, பெங்களூர், மும்பை, ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா என அனைத்து அணிகளிலுமே இங்கிலாந்து வீரர்கள் முக்கிய இடத்தை பிடித்து விளையாடி வரும் வேளையில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு வீரர்களை தயார் படுத்த வேண்டி இங்கிலாந்து நிர்வாகம் எந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதனால் பிளேஆப் சுற்று போட்டிகளுக்கு முன்னதாக அவர்களது நாட்டு வீரர்களை நாடு திரும்ப இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி வீரர்கள் நடப்பு ஐ.பி.எல் தொடரின் பிற்பாதியில் விளையாட மாட்டார்கள் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : பாண்டியா தேர்வு, ரிங்குவுக்கு இடமில்லை.. 2024 டி20 உ.கோ தொடருக்காக பிசிசிஐ வெளியிட்ட 15 பேர் இந்திய அணி

ஐபிஎல் தொடர் மே-26 ஆம் தேதி முடிவடையுள்ள வேளையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த புதிய அறிவிப்பு ஐபிஎல் அணிகள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் இந்த அறிவிப்பு பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்றே கூறலாம்.

Advertisement