சுமாரான ஃபார்மில் உள்ள பாண்டியா.. 2024 டி20 உ.கோ துணை கேப்டனாக தேர்வானாது ஏன்? அகர்கர் விளக்கம்

Ajit Agarkar 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு வீரர் கூட தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அதே போல இளம் வீரர் ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டுமே சேர்க்கப்பட்டது பல முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அத்துடன் அந்த அணியில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது பல இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டை முழுமையாக புறக்கணித்து விட்ட அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் காயத்தால் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவதில்லை. குறிப்பாக கடந்த உலகக் கோப்பையில் காயமடைந்து பாதியிலேயே வெளியேறிய அவர் உள்ளூர் போட்டியில் விளையாடாமல் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட வருகிறார்.

- Advertisement -

அகர்கர் விளக்கம்:
அதில் பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தாத அவர் கேப்டனாக மும்பை அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார். அந்த வகையில் ஃபார்மில் இல்லாத அவருக்கு உலகக்கோப்பை அணியில் இடமே கொடுக்கக் கூடாது என்று சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தெரிவித்தனர். ஆனால் கடைசியில் பார்த்தால் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக துணை கேப்டன் என்ற மிகப்பெரிய பதவி பாண்டியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு நிகரான மாற்று வீரர் இல்லை என்பதாலேயே அவரைத் தேர்வு செய்துள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “துணை கேப்டன்ஷிப் பதவியை பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் இதுவரை அனைத்து போட்டிகளிலும் விளையாடியுள்ளார். நம்முடைய முதல் போட்டிக்கு முன்பாக நமக்கு ஒரு மாதம் இடைவெளி இருக்கிறது”

- Advertisement -

“எனவே ஃபிட்டாக இருக்கும் வரை பாண்டியா செய்யக்கூடிய வேலையை செய்யும் மாற்று வீரர்கள் இல்லை. காயத்திற்கு பின் அவர் நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ளார். எனவே பவுலிங் உட்பட தன்னுடைய ஆட்டத்தில் அவர் வேலை செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக பந்து வீசும் விதத்தை வைத்து கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பாண்டியா நிறைய சமநிலையையும் தேர்வுகளையும் கொடுப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆஹா என்ன ஒரு செலக்சன்.. அதான் ஸ்பெஷலே.. ரசிகர்களின் கோபத்துக்கு மத்தியில் தேர்வுக்குழுவை புகழ்ந்த கைப்

அதாவது முதன்மை வேகபந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்ற பிரிவில் தற்சமயத்தில் பாண்டியாவுக்கு நிகராக வேறு இந்திய வீரர்கள் இல்லை என்று அகர்கர் கூறியுள்ளார். எனவே மாற்று வீரர் இல்லாததாலும் மும்பை அணியில் பந்து வீசி வருவதாலும் பாண்டியா உலகக் கோப்பை அணியில் துணை கேப்டன்ஷிப் பதவியை பெற்றுள்ளதாக அகர்கர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement