இவரை எடுக்காதது இந்தியாவுக்கு தான் லாஸ்.. பும்ராவை மிஞ்சிய நடராஜன்.. நடப்பு சீசனில் அபார சாதனை

Natarajan 4
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே இரண்டாம் தேதி நடைபெற்ற 50வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ரன்கள் டிராவிஸ் ஹெட் 58, நிதிஷ் ரெட்டி 76*, க்ளாஸென் 44* எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு பட்லர், சாம்சன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் ரியான் பராக் 77, ஜெய்ஸ்வால் 67 ரன்கள் எடுத்ததால் ராஜஸ்தான் வெல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் கடைசியில் துருவ் ஜுரேல் 1, ஹெட்மயர் 13, ரோவ்மன் போவெல் 27 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் த்ரில் வெற்றி பெற்ற ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 3, நடராஜன் 2, கேப்டன் கமின்ஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

இந்தியாவுக்கு தான் லாஸ்:
குறிப்பாக ரியன் பராக் – ஜெய்ஸ்வால் ஆகியோர் 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ராஜஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். அப்போது ஜெய்ஸ்வாலை துல்லியமான யார்கர் பந்தால் கிளீன் போல்ட்டாக்கிய தமிழக வீரர் நடராஜன் போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார். மறுபுறம் நல்ல ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வால் அவருடைய யார்க்கருக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கிளீன் போல்ட்டாகி தடுமாறி கீழே விழுந்தார்.

அந்தளவுக்கு வெறித்தனமான யார்க்கரை வீசிய நடராஜன் கடைசி நேரத்தில் ஃபினிஷிங் செய்ய முயற்சித்த ஹெட்மெயரையும் 13 (9) ரன்களில் அவுட்டாக்கினார். அந்த வகையில் 4 ஓவரில் 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்த அவர் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். இந்த 2 விக்கெட்டுகளையும் சேர்த்து நடப்பு சீசனில் 8 போட்டிகளில் நடராஜன் 15 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக ஐபிஎல் 2024 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பும்ரா (14), ஹர்ஷல் படேல் (14), முஸ்தபிஷர் ரஹ்மான் (14) ஆகியோரை முந்தியுள்ள நடராஜன் முதலிடத்தை பிடித்து ஊதா தொப்பியை வென்று சாதனை படைத்துள்ளார். குறிப்பாக ஹர்ஷல் (10.24), ரஹ்மான் (9.26) ஆகியோரை விட நடராஜனின் எக்கனாமி (8.96) மிகவும் குறைவாக உள்ளது.

இதையும் படிங்க: இந்த வருஷம் முதல் முறையா அது ஹெல்ப் பண்ணுச்சு.. ராஜஸ்தானை வீழ்த்திய ஆட்டநாயகன் புவனேஸ்வர் பேட்டி

இதே போலவே இந்த வருடம் முகமது சிராஜ் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோரை விட குறைந்த எக்கனாமியில் நடராஜன் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனாலும் அவர்களை 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக தேர்ந்தெடுத்துள்ள தேர்வு குழு நடராஜனை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இணைக்கவில்லை. அதனால் ஏற்கனவே கோபத்துடன் உள்ள தமிழக ரசிகர்கள் தற்போது ஊதா தொப்பியை வென்றுள்ள நடராஜனை தேர்வு செய்யாதது இந்தியாவுக்கு தான் பின்னடைவை கொடுக்கும் என்று தேர்வுக்குழுவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement