துல்லியமான 2 யார்க்கர்.. ஹைதராபாத்தின் 2 ரன் திரில் வெற்றிக்கு வித்திட்ட நடராஜன்.. இதை கவனிச்சீங்களா

Natarajan
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஐபிஎல் 2024 டி20 தொடர் மகிழ்வித்து வருகிறது. அதில் ஏப்ரல் 9ஆம் தேதி முல்லான்பூரில் நடைபெற்ற 23வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 182/9 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 64 (37), அப்துல் சமத் 25 (12) ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 183 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு கேப்டன் ஷிகர் தவான் 14, ஜானி பேர்ஸ்டோ 0, சாம் கரண் 29, சிக்கந்தர் ராசா 28, ஜிதேஷ் சர்மா 19 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

அசத்திய நடராஜன்:
அப்போது சசாங் சிங் அதிரடியாக 46* (25), அசுடோஸ் சர்மா 33* (15) ரன்கள் எடுத்துப் போராடினர். குறிப்பாக ஜெய்தேவ் உனட்கட் வீசிய கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட போது இந்த ஜோடி எதிரணி தவற விட்ட 3 கேட்ச்களை பயன்படுத்தி மொத்தம் 26 ரன்கள் அடித்து முழுமூச்சுடன் வெற்றிக்கு போராடியது. இருப்பினும் 20 ஓவரில் பஞ்சாப்பை 180/6 ரன்களுக்கு கட்டுப்படுத்திய ஹைதராபாத் த்ரில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக இந்த போட்டியில் தமிழக வீரர் நடராஜன் கடைசி 12 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்பட்ட போது 19வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் முதல் பந்திலேயே துல்லியமான யார்கர் போட்டு 1 ரன் மட்டுமே கொடுத்த அவர் 2 பந்தில் பவுண்டரி வழங்கினார். ஆனால் மீண்டும் 3வது பந்தில் யார்க்கர் போட்டு ரன் வழங்காத அவர் 4வது பந்தில் 1 ரன் மட்டுமே கொடுத்தார்.

- Advertisement -

அதே போல 5வது பந்தில் பவுண்டரி வழங்கினாலும் கடைசி பந்தில் துல்லியமான யார்கர் வீசிய அவர் ரன் எதுவும் வழங்கவில்லை. அந்த வகையில் முக்கியமான 19வது ஓவரில் 2 டாட் பந்துகளை வீசிய அவர் வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதனால் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்ற அழுத்தமான சூழ்நிலைக்கு பஞ்சாப் தள்ளப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் உனட்கட் தாறுமாறாக 3 ஒய்ட் பந்துகளை போட்டு 26 ரன்களை வாரி வழங்கினார்.

இதையும் படிங்க: அந்த ஒரே கேட்சை தவறவிட்டோம்.. அதுவும் இல்லாம கொஞ்சம் தப்பு பண்ணிட்டோம்.. தோல்விக்கு பிறகு – தவான் வருத்தம்

ஒருவேளை நடராஜனும் 19வது ஓவரில் உனட்கட் போல 1 ஒய்ட் அல்லது 2 எக்ஸ்ட்ரா ரன்களை கொடுத்திருந்தால் ஹைதராபாத் வெற்றி காலியாகி இருக்கும். அந்த வகையில் மொத்தமாக 4 ஓவரில் வெறும் 33 ரன்கள் மட்டும் கொடுத்து சாம் கரண் விக்கெட்டை எடுத்த நடராஜன் 8.2 என்ற நல்ல எக்கனாமியில் பந்து விசி ஹைதராபாத் வெற்றிக்கு வித்திட்டார் என்றால் மிகையாகாது.

Advertisement