அந்த ஒரே கேட்சை தவறவிட்டோம்.. அதுவும் இல்லாம கொஞ்சம் தப்பு பண்ணிட்டோம்.. தோல்விக்கு பிறகு – தவான் வருத்தம்

Dhawan
- Advertisement -

சண்டிகார் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நித்திஷ் ரெட்டி மற்றும் அப்துல் சமாத் ஆகியாரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பாக நித்திஷ் ரெட்டி 64 ரன்களையும், அப்துல் சமாத் 25 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது இறுதிவரை போராடி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி த்ரில் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில் : இந்த போட்டியில் ஷசாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோர் மிகச் சிறப்பான இன்னிசை விளையாடி இருந்தனர். சன் ரைசர்ஸ் அணியை 182 ரன்களுக்குள் சுருட்டியது சிறப்பான ஒன்று.

- Advertisement -

ஆனால் நாங்கள் பேட்டிங்கின் போது முதல் ஆறு ஓவர்களில் சரியாக விளையாடவில்லை. பவர்பிளேவிற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் அது கடைசி நேரத்தில் பாதிப்பாக அமைந்தது. இந்த போட்டியில் பவுன்ஸ் இல்லாததால் பந்தினை கணித்து விளையாட முடியாமல் போனது. அதேபோன்று போட்டியின் கடைசி பந்தில் கேட்சை தவறவிட்டோம்.

இதையும் படிங்க : வேகத்தில் வினோதம் நிகழ்த்திய புவனேஸ்வர் குமார்.. வேறு எந்த பவுலரும் செய்யாத அரிதான சாதனை

அதுமட்டுமின்றி பீல்டிங்கின் போது 10-15 ரன்களை குறைத்திருக்கலாம் இது போன்ற சில தவறுகளால் தான் இந்த தோல்வி ஏற்பட்டது. இருந்தாலும் இளம் வீரர்கள் இந்த போட்டியில் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிப்பதாக ஷிகர் தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement