வேகத்தில் வினோதம் நிகழ்த்திய புவனேஸ்வர் குமார்.. வேறு எந்த பவுலரும் செய்யாத அரிதான சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதி சண்டிகரில் நடைபெற்ற 23வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 182/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நித்திஸ் ரெட்டி 64 (37), அப்துல் சமத் 25 (12) ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதன் பின் 183 ரன்களை துரத்திய பஞ்சாப்புக்கு கேப்டன் ஷிகர் தவான் 14, ஜானி பேர்ஸ்டோ 0, சாம் கரண் 29, சிக்கந்தர் ராசா 28, ஜித்தேஷ் சர்மா 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் கடைசி நேரத்தில் சசாங் சிங் 46* (25) அசுடோஸ் சர்மா 33* (15) ரன்கள் அடித்துப் போராடியும் 20 ஓவரில் 180/6 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

அரிதான சாதனை:
ஹைதராபாத் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக நட்சத்திர இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 32 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். குறிப்பாக பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் தடுமாற்றமாக விளையாடியதால் இறங்கி வந்து அடிக்க முயற்சித்தார். அதை கவனித்த புவனேஸ்வர் குமார் 5வது ஓவரில் விக்கெட் கீப்பர் ஹென்றிச் க்ளாஸெனை ஸ்டம்ப்புக்கு அருகே நிற்க வைத்து குறைத்து பந்து வீசினார்.

அந்த வலையில் விழுந்த ஷிகர் தவான் 4வது பந்தை இறங்கி சென்று அடிக்க முயற்சித்து தவற விட்டார். அப்போது காத்திருந்த க்ளாஸென் பந்தை பிடித்து ஸ்டம்பிங் முறையில் தவானை 14 ரன்களில் அவுட்டாக்கினார். பொதுவாக எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் ஸ்பின்னர்கள் தான் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குவது வழக்கமாகும்.

- Advertisement -

ஆனால் அதற்கு விதிவிலக்காக ஒரு வேகப்பந்து வீச்சாளாராக தவானை ஸ்டம்ப்பிங் முறையில் அவுட்டாக்கி வினோதத்தை நிகழ்த்திய புவனேஸ்வர் குமார் ஏற்கனவே 2013இல் கொல்கத்தா வீரர் மன்விந்தர் பிஸிலாவை ஸ்டம்ப்பிங் முறையில் அவுட்டாக்கியுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஸ்டம்ப்பிங் முறையில் 2 விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற அரிதான சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்த ரூல்ஸ் இருக்குற வரை இனிமே 160 ரன் எல்லாம் அடிச்சா பத்தாது.. வெற்றிக்கு பிறகு – பேட் கம்மின்ஸ் பேட்டி

இதற்கு முன் 2008இல் உத்தப்பாவுக்கு எதிராக அகில், 2008இல் கிரேம் ஸ்மித்துக்கு எதிராக ஷான் பொல்லாக், 2009இல் கர்சேல்டினுக்கு எதிராக சமீந்தா வாஸ், 2011இல் டேன் கிறிஸ்டினுக்கு எதிராக முனாஃப் படேல், 2013இல் கௌதம் கம்பீருக்கு எதிராக ஷேன் வாட்சன், 2014இல் சுரேஷ் ரெய்னாவுக்கு எதிராக பொல்லார்ட், 2016இல் ப்ரெண்டன் மெக்கல்லத்திற்கு எதிராக சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 முறை ஸ்டம்பிங் முறையில் விக்கெட் எடுத்துள்ளதே முந்தைய அதிகபட்சமாகும்.

Advertisement