இந்த ரூல்ஸ் இருக்குற வரை இனிமே 160 ரன் எல்லாம் அடிச்சா பத்தாது.. வெற்றிக்கு பிறகு – பேட் கம்மின்ஸ் பேட்டி

Cummins
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியானது நேற்று சண்டிகர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.

சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 64 ரன்களை குவித்தார். பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்ததால் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி த்ரில் வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : இந்த போட்டி மிகச் சிறப்பான ஒரு போட்டியாக அமைந்தது. பஞ்சாப் அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை போட்டியின் ஆரம்பத்திலேயே பின்னுக்கு தள்ளினர்.

ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து 180 ரன்கள் குவித்தது சிறப்பாக இருந்தது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை இம்பேக்ட் பிளேயர் விதிமுறை இருப்பதால் பேட்டிங் ஆர்டர் பலம் அதிகமாகிறது. எனவே எப்போது வேண்டுமென்றாலும் ஒரு அணியால் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

- Advertisement -

இந்த விதிமுறை இருப்பதினால் இனி 150 முதல் 160 ரன்கள் வரை அடிக்கும் பட்சத்தில் பத்தில் ஒன்பது போட்டிகள் தோல்வியை தான் கொடுக்கும். அதே வேளையில் இந்த 180 ரன்களை வைத்து நாங்கள் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசினால் நிச்சயம் வெற்றியை நோக்கி செல்ல முடியும் என்று நினைத்தோம்.

இதையும் படிங்க : இதான் டி20யின் அழகே.. அவர மாதிரி பிளேயர்ஸ் வருவது இந்தியாவுக்கு நல்லது.. புவனேஸ்வர் குமார் பேட்டி

அந்த வகையில் மைதானத்தின் தன்மையை கணித்து நானும் புவனேஸ்வர் குமாரும் பந்துவீச்சில் சிறப்பான துவக்கத்தை அளித்தோம். அதோடு மிடில் ஓவர்களிலும் எங்களது அணியில் நல்ல ஸ்பின்னர்கள் இருந்ததனால் இந்த போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடிந்ததாக பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement