என்ன நடந்தாலும் அவரை எடுத்தே தீருவோம். அவர்தான் அடுத்த மும்பை கேப்டன் – நிர்வாகம் விடாபிடி

MI
Advertisement

ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது நடைபெற்று முடிந்த 14வது சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. நடப்பு ஐபிஎல் தொடருக்கு முந்தைய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த மும்பை அணி மீண்டும் 14வது ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹாட்ரிக் பட்டத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அனைத்து அணிகளும் எளிதாக மும்பை அணியை வீழ்த்தின.

mi 1

இதன் காரணமாக அடுத்த சீசனுக்கான மும்பை அணியில் பெரிய மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் அடுத்த ஆண்டு 15வது சீசனுக்கான தொடரில் 10 அணிகள் மோதுவதால் தற்போது வீரர்கள் கலைக்கப்பட்டு நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்கிற காரணத்தினால் மும்பை அணி ரோகித், பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு ஆகியோரை தக்க வைக்க விரும்புகிறது.

- Advertisement -

மற்ற அனைவரையும் ஏலத்தில் விடப்போகிறது. அப்படி வீரர்கள் கலைக்கப்பட்டு மீண்டும் ஏலம் எடுக்கும்போது சில முக்கிய வீரர்களை அனைத்து அணிகளும் குறிவைக்கும். அப்படி மும்பை அணி குறிவைக்கும் ஒரு வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் இருக்கிறார். ஏனெனில் மும்பை மும்பையைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் டெல்லி அணிக்காக கேப்டனாக விளையாடிய போது அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.

iyer 1

அதுமட்டுமின்றி இந்திய அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் ரோஹித் சர்மாவிற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயரை எப்படியும் இந்த ஏலத்தில் எவ்வளவு தொகை கொடுத்து வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : கேப்டன் பதவியில் இருந்து விலகிய க்ருனால் பாண்டியா. அப்பாடா நல்ல முடிவு – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஏற்கனவே டொமஸ்டிக் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி அனுபவம் உடையவர். இதன் காரணமாக ரோஹித்துக்கு பதிலாக கேப்டனாக செயல்படவும், மும்பை அணியின் அடுத்த கேப்டனாகவும் அவருக்கு வாய்ப்பு உள்ளதால் அவரை வாங்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement