கேப்டன் பதவியில் இருந்து விலகிய க்ருனால் பாண்டியா. அப்பாடா நல்ல முடிவு – ரசிகர்கள் மகிழ்ச்சி

Krunal
- Advertisement -

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான க்ருனால் பாண்டியா டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்த சூழலில் அவரது பார்ம் அவுட் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து மும்பை அணியிலும் அவர் பெரிதாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் க்ருனால் பாண்டியாவை அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னர் மும்பை அணி கழட்டி விடும் திட்டத்தில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது குஜராத் மாநில பரோடா கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் க்ருனால் பாண்டியா விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அண்மையில் பி.சி.சி.ஐ நடத்திய சையது முஷ்டாக் அலி தொடரை தொடர்ந்து தற்போது விஜய் ஹசாரே கோப்பை நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான பரோடா அணியின் கேப்டன் பதவியிலிருந்து திடீரென க்ருனால் பாண்டியா விலகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : க்ருனால் பாண்டியா விலகியது உண்மைதான். ஆனால் ஒரு வீரராக அவர் இந்த தொடரில் விளையாடுவார். அவர் தற்போது கேப்டன் பதவியில் இருந்து மட்டுமே விலகியுள்ளார். இது குறித்த தகவலையும் எங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி உள்ளார்.

krunal 1

அதில் தான் கேப்டன் பதவியில் இருந்து முறைப்படி விலகுவதாகவும் அணியில் ஒரு வீரராக தொடர விருப்பம் தெரிவித்தும் அவர் அந்த மின்னஞ்சலை அனுப்பியதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாண்டியாவின் ஆட்டிட்யூட் மோசமாக இருந்ததால் ரசிகர்களிடம் பெரிதளவு விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் தற்போது கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியதும் பரோடா அணிக்கு நல்லதுதான் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை அணி தக்கவைக்கும் 4 வீரர்கள் இவர்கள்தானாம். பாண்டியா சகோதரர்களுக்கு குட்பை – விவரம் இதோ

மேலும் 15வது ஐபிஎல் தொடரில் அவரோடு சேர்ந்து ஹர்திக் பாண்டியாவையும் மும்பை அணியில் இருந்து வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளதால் அவர்கள் இருவரையும் அகமதாபாத் அணி ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement