டி20 உ.கோ தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருக்க தகுதியானவர் அவர்தான். ரோஹித் இல்லை – பட்டாச்சார்யா கருத்து

Jay
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஎல் தொடரானது எதிர்வரும் மே 26-ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதன் பின்னர் ஒரு வார இடைவெளியில் ஜூன் 2-ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடரானது துவங்க இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தேர்வு ஐபிஎல் போட்டியின் முடிவுகளின் அடிப்படையிலேயே அமையும் என்று பேசப்பட்ட வந்தது.

இவ்வேளையில் இவ்வார இறுதியில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த உலககோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வானது இந்திய அணியின் தேர்வு குழுவினருக்கும், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோருக்கு பெரிய தலைவலியை கொடுக்க காத்திருக்கிறது.

- Advertisement -

ஏனெனில் தற்போது இந்திய அணியில் விளையாடும் வீரர்களை தவிர்த்து ஐபிஎல் கிரிக்கெட்டில் டொமஸ்டிக் வீரர்கள் பலரும் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் எந்தெந்த வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கப் போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டான கவுன்சிலான ஐசிசி மே 1-ஆம் தேதிக்குள் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியின் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கெடு விதித்திருந்தது.

இவ்வேளையில் ஏப்ரல் 28 அல்லது 30 ஆம் தேதி டெல்லியில் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்க்கர் ஆகிய மூவரும் இணைந்து இந்திய அணியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட தகுதியற்றவர் என கே.கே.ஆர் அணியின் முன்னாள் டைரக்டர் ஜாய் பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் ஒரு அற்புதமான வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதே நேரம் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்கும் முடிவு இந்திய அணிக்கு பாதகமாக இருக்கலாம். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை விட பும்ரா கேப்டனாக செயல்பட்டால் அது அணிக்கு பலன் அளிக்கும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : இது வெறும் டெஸ்டிங்.. எங்களோட மெய்ன் ஃபிக்சரை அங்க பாப்பீங்க.. நியூஸிலாந்து தோல்வி பற்றி பாபர் அசாம்

அதோடு ரோகித் சர்மா கிரிக்கெட்டில் அனைத்தையும் சாதித்து விட்டார். அவர் செய்ய வேண்டிய ஒன்று ஒரு உலகக் கோப்பை வென்று கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான். அதனால் அவரது முடிவை மதித்தாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவதில் விருப்பம் இல்லை என ஜாய் பட்டாச்சாரியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement