இது வெறும் டெஸ்டிங்.. எங்களோட மெய்ன் ஃபிக்சரை அங்க பாப்பீங்க.. நியூஸிலாந்து தோல்வி பற்றி பாபர் அசாம்

Babar Azam
- Advertisement -

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் பாகிஸ்தான் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வென்ற பாகிஸ்தானை 3வது ஆட்டத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது. அந்த நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற 4வது போட்டியிலும் பாகிஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது.

லாகூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 179 ரன்களை நிர்ணயித்தது. அதிகபட்சமாக டிம் ராபின்சன் 51, பாக்ஸ்க்ரோப்ட் 34 ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 5, சாயும் ஆயூப் 20, உஸ்மான் கான் 16, ஷடாப் கான் 7, இப்திகார் அகமது 23 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

டெஸ்டிங் மூட்:
அதே போல மிடில் ஆர்டரில் அசத்திய ஃபகார் ஜமான் முக்கிய நேரத்தில் 61 ரன்னில் அவுட்டானார். அதனால் கடைசி நேரத்தில் இமாத் வசிம் 22* (11) ரன்கள் எடுத்துப் போராடியும் பாகிஸ்தானை 174/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய நியூசிலாந்து த்ரில் வெற்றி பெற்றது. இத்தனைக்கும் கேன் வில்லியம்சன் போன்ற 10க்கும் மேற்பட்ட முக்கிய நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுகின்றனர்.

அதனால் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையில் இளம் வீரர்களுடன் இத்தொடரில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி வலுவான பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் நியூஸிலாந்து பி அணியிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தானை வழக்கம் போல ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இத்தொடரில் தங்களுடைய பெஞ்சில் உள்ள வீரர்களின் பலத்தை சோதிப்பதாக தெரிவிக்கும் கேப்டன் பாபர் அசாம் பாகிஸ்தானின் உண்மையான ஆட்டத்தை 2024 டி20 உலகக் கோப்பையில் பார்ப்பீர்கள் எனக் கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “முதல் 6 ஓவரில் நாங்கள் சில விக்கெட்டுகளை இழந்தோம். பகார் ஜமான் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடியும் துரதிஷ்டவசமாக எங்களால் சேசிங் செய்ய முடியவில்லைஇமாத் நல்ல இன்னிங்ஸ் விளையாடினார். வித்தியாசமான பிட்ச்சை கொண்ட லாகூரில் 190 சராசரி ஸ்கோராகும்”

இதையும் படிங்க: இப்படி செய்வீங்கன்னு எதிர்பாக்கவே இல்ல.. அந்த பையனை பாருங்க.. விராட் கோலியை விளாசிய கவாஸ்கர்

“அதற்குள் நாங்கள் நியூசிலாந்தை கட்டுப்படுத்தியதால் இது சேசிங் செய்யப்பட வேண்டிய இலக்காகும். இருப்பினும் காயங்களால் எங்கள் அணியில் சில மாற்றங்கள் செய்தோம். எங்களுடைய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அந்த வகையில் எங்களுடைய பெஞ்சின் பலத்தை சோதித்து வித்தியாசமான கலவையை முயற்சிப்பதே எங்களின் திட்டமாகும். அதனால் ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் புதியவற்றை வித்தியாசமாக முயற்சிக்கிறோம். எனவே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக நாங்கள் செட்டிலாகி விடுவோம்” என்று கூறினார்.

Advertisement