எப்பா இவ்வளவு லட்சமா.. இந்தியாவை போன்ற எதிரணிகளை தோற்கடிக்க இப்போதே பரிசுத் தொகையை அறிவித்த பாகிஸ்தான்

Pakistan Team
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து நாடுகளும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டுள்ளன. அந்த வகையில் 2009 சாம்பியான பாகிஸ்தான் இம்முறை பாபர் அசாம் தலைமையில் மீண்டும் கோப்பையை வெல்வதற்காக களமிறங்க உள்ளது.

கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் அவருடைய தலைமையில் கொஞ்சம் அதிர்ஷ்டத்துடன் அசத்திய பாகிஸ்தான் ஃபைனல் வரை சென்ற இங்கிலாந்திடம் தோற்றது. ஆனால் அதன் பின் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் பரம எதிரி இந்தியாவிடம் தோல்வியை சந்தித்து நாக் அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

- Advertisement -

பரிசு அறிவிப்பு:
அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்ற பாபர் அசாம் தன்னுடைய அனைத்து கேப்டன்ஷிப் பதவிகளையும் ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷாஹீன் அப்ரிடி தலைமையில் நியூசிலாந்து மண்ணில் 4 – 1 (5) என்ற கணக்கில் பாகிஸ்தான் தோற்றது. அதனால் ஒரு தொடருடன் அவரை உடனடியாக கழற்றி விட்ட பாகிஸ்தான் வாரியம் பாபர் அசாமை மீண்டும் புதிய கேப்டனாக அறிவித்தது.

ஆனால் அவரது தலைமையில் சமீபத்தில் சொந்த மண்ணில் இளம் நியூசிலாந்து அணியிடம் திணறலாக செயல்பட்ட பாகிஸ்தான் 2 – 2 (5) என்ற கணக்கில் போராடி கோப்பையை பகிர்ந்து கொண்டது. அந்த சூழ்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக கேரி கிறிஸ்டனை தங்களுடைய புதிய பயிற்சியாளராக பாகிஸ்தான் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.

- Advertisement -

2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவரை பாகிஸ்தான் வாரியம் பயிற்சியாளராக அறிவித்தது அந்நாட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பட்சத்தில் ஒவ்வொரு பாகிஸ்தான் வீரருக்கும் தலா 100000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு வாரியம் தற்போதைய அறிவிப்புள்ளது. பொதுவாக சாம்பியன் பட்டம் வென்ற பின்பே இப்படி பரிசுகள் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.

இதையும் படிங்க: இதெல்லாம் தோனியால் கூட சொல்லிக் கொடுக்க முடியாது.. மும்பை மூட்டையை கட்டும் முன்.. பாண்டியா பேட்டி

ஆனால் இந்தியா போன்ற எதிரணிகளை வீழ்த்தி கோப்பையை வெல்வதற்காக தங்கள் வீரர்களுக்கு இப்போதே உத்வேகத்தை கொடுக்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் வாரியம் இந்த அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி உலகக் கோப்பையை வென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்திய ரூபாயில் சுமார் 83 லட்சம் பரிசுத்தொகையாக பெறுவார்கள். கடந்த உலகக் கோப்பையில் சம்பளம் கொடுக்கவில்லை என்று தங்கள் நாட்டு வாரியத்தையே விமர்சித்த பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்த அறிவிப்பு உத்வேகத்தை கொடுக்கும் என்றால் மிகையாகாது.

Advertisement