இதெல்லாம் இந்தியாவுக்கு தெரிஞ்சா அனுமதிச்சுருக்க மாட்டாங்க.. இது பாகிஸ்தானுக்கு அவமானம்.. ரமீஸ் ராஜா கொதிப்பு

Ramiz Raja
- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்து அயர்லாந்து சாதனை படைத்தது.

இருப்பினும் இரண்டாவது போட்டியில் வென்ற பாகிஸ்தான் பதிலடி கொடுத்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இந்நிலையில் அயர்லாந்து வாரியம் நடத்தும் இந்த தொடரில் நேரலை ஒளிபரப்பின் தரம் நன்றாக இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா விமர்சித்துள்ளார். குறிப்பாக கிளப் தொடரை போல் இத்தொடரின் ஒளிபரப்பு இருப்பதாக அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

ரமீஸ் ராஜா அதிருப்தி:
அந்த வகையில் இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அவமானம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்படி அடிப்படை வசதி நன்றாக இல்லை என்று தெரிந்தால் அயர்லாந்தில் விளையாடுவதற்கு இந்தியா சம்பந்தமே தெரிவித்திருக்காது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் நேரடி ஒளிபரப்பு எனக்கு பிடிக்கவில்லை. இது கிளப் போட்டியை ஒளிபரப்புவதை போன்ற உணர்வை கொடுக்கிறது”

“ஏனெனில் 2 கேமராக்கள் மட்டுமே இருக்கிறது. டிஆர்எஸ் மற்றும் ரீப்ளை டெக்னாலஜி இல்லை. அதனால் நல்ல ஷாட்டை அடிக்கும் போது அதை உங்களால் மறுபடியும் பார்க்க முடியவில்லை. இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகவும் அநீதியானது. பலர் பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்க்க விரும்புகின்றனர். அது உலகம் முழுவதும் ஒரு ஒளியை கொண்டுள்ளது. ஆனால் இதை பார்ப்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அநீதியானது”

- Advertisement -

“இதை முன்கூட்டியே யாராவது ஒருவர் கண்டுபிடித்திருக்க வேண்டும். இது போன்ற ஒளிபரப்பு இருந்தால் வேறு யாராவது அயர்லாந்து கிரிக்கெட்டில் உரிமையை வாங்கியிருக்க வேண்டும். ஏனெனில் இது உலகக் கோப்பைக்கு தயராவதற்கான பயணமாகும். ஒருவேளை இங்குள்ள சூழ்நிலை பற்றி தெரிந்திருந்தால் இந்தியா இது போன்ற ஒளிபரப்பை அனுமதித்திருக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக சொல்வேன்”

இதையும் படிங்க: டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்க முடியுமா? இந்தியாவின் புதிய பயிற்சியாளருக்கான ரூல்ஸ் என்ன? பிசிசிஐ அறிவிப்பு

“ஏனெனில் உங்களுடைய கௌரவம் உங்கள் கையில் இருக்கிறது. பாகிஸ்தானின் கௌரவம் அவர்கள் கையில் இருக்கிறது. எனவே இது போன்ற ஒளிபரப்பை பார்ப்பது நம்முடைய கிரிக்கெட்டை கிடைமட்டமாக காட்டுகிறது. இது நியாயமற்றது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் கடைசி போட்டி மே 14ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement